ஆயுர்வேதம் – மனித வாழ்க்கையின் நிரந்தரமான என்றும் நிலைத்திருக்கும் விஞ்ஞானம் !

ஆயுர்வேதம் என்றால் ‘வாழ்வின் வேதம்’ அல்லது ‘மனித வாழ்க்கையின் விஞ்ஞானம்’ என்பது பொருள். அதாவது, ஒரு தனி மனிதனின் நலனை உடலளவில், மனதளவில், சமூக அளவில், ஆன்மீக அளவில் எவ்வாறு பாதுகாப்பது என்று ஆயுர்வேதம் வழிகாட்டுகிறது. நல்ல வாழ்க்கைக்குத் தேவையான நல்ல உணவு, நல்ல பொழுதுபோக்கு, நல்ல நடத்தை மற்றும் எதிர்மறையான, தவிர்க்கப்பட வேண்டிய உணவு, பொழுதுபோக்கு, நடத்தை முதலியவற்றை பாகுபடுத்தி நமக்குத் தெரிவிக்கிறது. மேலும் ஆயுர்வேதம், மனித வாழ்க்கையின் குறிக்கோளையும் மனித வாழ்வின் உண்மையான மகிழ்ச்சி என்ன என்பதையும் தெரிவிக்கிறது. அத்துடன் பல்வேறு வியாதிகள் தோன்றுவதற்கான காரணங்களையும் அவற்றின் அடையாள அறிகுறிகளையும் அவற்றை தடுப்பதற்கு உரிய வழிமுறைகளையும் விரிவாக எடுத்துரைக்கிறது. மேலும் நமது ஒட்டுமொத்த வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் நாம் பிறவி எடுத்ததன் பயனை அடைவதற்கும் எல்லாவிதமான வாழ்க்கைத் துயரங்களிலிருந்தும் நிரந்தரமாக விடுதலை அடைவதற்கும் ஆன்மீக உணர்வில் இடையறாது திளைத்து இந்த பிறவியிலும் மற்றும் வரும் பிறவிகளிலும் இடையறாத ஆனந்தத்தை அனுபவிப்பதற்கும் வழிகாட்டுகிறது. சுருக்கமாக ஆயுர்வேதம், ஒரு மனிதன் வெற்றிகரமான, தரமான, நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு வழிகாட்டுவதுடன் ஒரு மனித வாழ்வு எல்லாவிதங்களிலும் நிறைவாக அமைய எப்படி வாழ்க்கை இருக்க வேண்டும் என வடிவமைத்துக் கொடுக்கும் ஒரு விஞ்ஞானமாகும்.

1.    ஹிந்து தர்மத்தினால் அளிக்கப்பட்ட
அற்புதமான பரிசான ஆயுர்வேதத்தின் முக்கியத்துவம்

ஆயுர்வேதம் என்பது அன்றாட நடைமுறை வாழ்க்கைக்கு உரிய, நித்யமான, நீடித்து இருக்கக்கூடிய, தொடர்ச்சியான ஒரு விஞ்ஞானம் ஆகும்.

ந சைவ ஹி அஸ்தி ஸுதராம் ஆயுர்வேதஸ்ய பாரம் | (சரகஸம்ஹிதை விமானஸ்தான், அத்யாயம் 8, ஸ்லோகம் 14)

அர்த்தம் : ஆயுர்வேத ஞானத்திற்கு எல்லையே இல்லை. தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருப்பது ஆயுர்வேதத்தின் தன்மையாகும்.

ஸோயமாயுர்வேத: சாச்வதோ நிர்திஷ்யதே அனாதித்வாத் ஸ்வபாவஸம்ஸித்த-லக்ஷணத்வாத் | (சரகஸம்ஹிதை சூத்ரஸ்தான், அத்யாயம் 30, ஸ்லோகம் 25)

அர்த்தம் : நிரந்தரமான ஆயுர்வேதம், என்றும் நிலைத்திருக்கும்படியானது என்று சுய நிரூபணமான ஒரு விஞ்ஞானமாகும். ஆயுர்வேதம் என்பதற்கு வாழ்க்கையின் வேதம் அல்லது வாழ்க்கையைப் பற்றிய ஞானம் என்பது பொருளாகும். வாழும் முறை மற்றும் எப்படி நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வது என்பது பற்றிய உபயோகமான தகவல்களை ஒரு முக்கிய பகுதியாக கொண்டது ஆயுர்வேதமாகும். கடந்த காலத்தில் வாழ்ந்த மகான்கள் ஆயுர்வேதத்தின் மீது மிகுந்த மதிப்பிற்குரிய கண்ணோட்டம் கொண்டிருந்தார்கள். அதாவது எல்லா விதமான விஞ்ஞானங்களும் ஆயுர்வேதத்துடன் பிரிக்க முடியாத பகுதியாக இணைந்திருந்தது என்பதே அவர்களின் கருத்து. இந்த அணுகுமுறையின் மூலம் ஹோமியோபதி, அக்யுபங்க்சர், அலோபதி, எலக்ட்ரோபதி, நேச்சுரோபதி, மாக்னடோ தெரபி போன்ற எல்லா வைத்திய முறைகளும் ஆயுர்வேதத்தின் ஒரு பகுதியே என்று நாம் தெரிந்து கொள்கிறோம். அதிகபட்சமாக மேற்குறிப்பிட்ட வைத்திய முறைகளை ஆயுர்வேதத்தின் கிளைகளாகக் கருதலாம். இத்தகைய பெரிய ஆயுர்வேத மரத்தின் கிளைகளாக விளங்கும் மற்ற வைத்திய முறைகள் தங்கள் தனித்துவத்தை தக்க வைத்துக் கொண்டு மேலும் வளரலாம். இத்தகைய பரந்து விரிந்த ஆயுர்வேதத்தை அறிந்து கொள்வதற்கு அதன் அடிப்படைக் கொள்கைகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.

‘ந அநௌஷதம் ஜகதி கிஞ்சித் த்ரவ்யம் உபலப்யதே’ (சரகஸம்ஹிதை சூத்ரஸ்தான், அத்யாயம் 26, ஸ்லோகம் 12)

இதன் அர்த்தம் என்னவென்றால் ‘இவ்வுலகில் மருந்தாக பயன்படுத்த முடியாத ஒரே ஒரு பொருள் கூட கிடையாது’ என்பதே ஆகும். மருந்தாக பயன்படுத்தக் கூடிய தாவரங்களின் தன்மைகளையும் அவை எப்படி மனித உடம்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது பற்றியும் விவரிப்பதே ஆயுர்வேதமாகும். உதாரணமாக ‘திப்பிலி’ உஷ்ண தன்மை வாயந்ததாகவும் ‘நெல்லிக்காய்’ குளுமை தன்மை வாயந்ததாகவும் உள்ளன. அதனால் திப்பிலியைத் தொடும்போது சூடாகவும் நெல்லிக்காயைத் தொடும்போது குளிர்ச்சியாகவும் உணர்வோம் என்பது பொருள் அல்ல. உண்மையான பொருள் என்னவென்றால் உஷ்ணம் மிகுந்த பொருள் உடலின் மெடபாலிஸ விகிதத்தை அதிகரிக்க செய்கிறது. குளிர்ச்சியான பொருள் உடலின் மெடபாலிஸ விகிதத்தை குறையச் செய்கிறது என்பதே ஆகும். உஷ்ணமான பொருள் vasodilatation-க்கு (நரம்புக்குழாய் விரிதல்) காரணமாகவும் குளிர்ச்சியான பொருள் vasoconstriction-க்கு (நரம்புக்குழாய் சுருங்குதல்) காரணமாகவும் அமைகிறது. ஆயுர்வேதம் இனிப்பு, துவர்ப்பு, உப்பு, புளிப்பு, காரம் என்ற அறுசுவை உணவு மற்றும் மசாலா சாமான்கள் போன்றவற்றின் தன்மைகளையும் குணங்களையும் அழகாக விவரிப்பதுடன் எந்தெந்த உணவுப்பொருட்களை எந்தெந்த உலோகப் பாத்திரத்தில் சமைத்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் எடுத்துரைக்கிறது.

ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மருத்துவ குணமுள்ள மூலிகைகள் அதிக அளவில் கிராமங்களிலேயே கிடைக்கின்றன. எனவே வழக்கமாக கிடைக்கும் எந்த மூலிகை எந்த நோயை குணமாக்கும் என்ற தகவல்களும் நோயற்ற ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை நடத்த தேவையான வழிகாட்டுதலும் ஆயுர்வேதத்தில் கிடைக்கிறது.

ஆயுர்வேத மருத்துவர்களான சரகர், சுஷ்ருதர் காலத்தில் தாவர மூலிகைகளின் பல பாகங்கள் மருந்துகளாக உபயோகிக்கப்பட்டன. மூலிகைத் தாவரங்களின் ஸம்ஸ்ருத பெயர்கள் அவைகளின் தன்மைகளையும் செயல்பாடுகளையும் பற்றிய விவரங்களை தெரிவிப்பனவாக உள்ளன. உதாரணமாக ‘குஷ்டா’ என்ற மூலிகைத் தாவரம் குஷ்ட ரோகம் என்ற தோல் வியாதிக்கு மருந்தாக உள்ளது. ‘பிராம்மி’ என்ற மூலிகை நினைவாற்றலையும் புத்தி கூர்மையையும் அதிகரிக்க செய்கிறது. ‘அஸ்வகந்தா’ என்ற மூலிகையின் வாசனை குதிரையினின்று வரும் வாசனையை ஒத்துள்ளது. குதிரை ஆண்பாலை குறிக்கும் அடையாளமாக உள்ளது. அதற்கேற்ப அந்த மூலிகையும் ஆணின் இனபெருக்கத்திற்கான பிறப்புறுப்பை வலுப்படுத்துவதாக உள்ளது. அதே போன்று ‘பலந்தஷோபா’ என்ற மூலிகை ‘ஷடபுஷ்பா’ என்று ஸம்ஸ்க்ருதத்தில் அழைக்கப்படுகிறது. புஷ்பா என்றால் மலர் என்று பொருள். இந்த மூலிகை குழந்தை உற்பத்திக்கான பெண்பால் உறுப்பு வலுப்பெற உதவுகிறது. மெலிந்த உடல் சிறிது பருமனாக ‘மேடா, மகாமேடா’ என்னும் மூலிகைகள் உதவுகின்றன. அதன் பயனாக உடலின் எடை கூடுகிறது.

தனிப்பட்ட மனிதனின் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவும் ஒருவகையான வழிகாட்டு முறையாகவும் ஆயுர்வேதம் அமைந்துள்ளது. இது எவ்வாறு என்றால் காலத்திற்கேற்றபடியும் குணத்திற்கேற்றபடியும் யம, நியமாதிகளை (5 விதமான நன்னடத்தை, 5 விதமான விதிகள்) எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்று கற்பிக்கின்றது. இவ்வாறு ஒரு மனிதன் தனது விதிப்பயனால் ஒரு வியாதியை அனுபவிக்க நேர்ந்தாலும் அவனது நடத்தை ஆயுர்வேத வழிகாட்டுதலின்படி இருந்தால் அந்த ஜீவாத்மாவுக்கு கருப்பு சக்திகளிலிருந்து பாதுகாப்பு ஏற்பட்டு விதியைத் தாங்கிக் கொள்ளும் சக்தியும் அதோடு கூட ஆன்மீக வளர்ச்சி அடையும் நிலையும் ஏற்படும்.

திரு. நிஷாத் தேஷ்முக்

2.ஆயுர்வேத பயிற்சி ஒரு வகை ஆன்மீக பயிற்சியாகும்!

மகிழ்ச்சியின் உச்சநிலை அதாவது ஆனந்த நிலை ஆன்மீக பயிற்சி செய்வதாலேயே கிடைக்கும். இந்த உண்மை தெரிந்த அந்தக் கால மகான்களும் சாதுக்களும் ஆன்மீக பயிற்சி கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே பலவகைப்பட்ட வழிமுறைகளை, விஞ்ஞானங்களை கண்டறிந்தார்கள். ஆயுர்வேத பயிற்சியும் இவைகளுள் ஒன்றே. எனவே பொது வழிபாட்டில் முக்கிய அங்கமாக விளங்கும் நன்மைகளும் தன்மைகளும் ஆயுர்வேதத்திலும் காணப்படுகிறது. இதன் பரிசீலனை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

2அ. காலத்திற்கேற்றபடியும்
குணத்திற்கேற்றபடியும் வழிகாட்டுதலை அளிக்கும் ஆயுர்வேதம்

காலத்திற்கேற்றபடியும் குணத்திற்கேற்றபடியும் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடான விதிமுறைகளைப் பற்றி ஆயுர்வேதம் ஜீவாத்மாக்களுக்கு வழிகாட்டுகிறது. உதாரணமாக எந்தெந்த பருவ காலங்களுக்கு எந்தெந்த உணவு முறை ஏற்றது என்று குறிப்பிடுவதுடன் கூட அந்த உணவு வகைகளை எந்த அளவு உட்கொள்ள வேண்டும் என்றும் வழிகாட்டுகிறது. வயது முதிர்ந்த காலத்தில் என்னென்ன விஷயங்களில் முன்ஜாக்கிரதை தேவை என்ற விவரங்களையும் எடுத்துக் கூறுகிறது. இவ்வாறு ஜீவாத்மாக்கள் காலத்திற்கேற்றபடியும் குணத்திற்கேற்றபடியும் செயல்படுவதன் மூலம் அவர்களுக்குத் தேவையான சக்தி கிடைப்பதால் அவர்கள் தங்களது ஆன்மீக பயிற்சியின் மூலம் கிடைக்கும் சக்தியை உடல் வியாதி, மனோவியாதி மற்றும் இதர வியாதிகளை குணப்படுத்த உபயோகிக்காமல் மென்மேலும் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடையவே அந்த சக்தியை உபயோகிக்க முடியும்.

2 ஆ. ஆயுர்வேதத்தில் இருக்கும் ‘யம, நியம’ங்களை
(5 விதமான நன்னடத்தை, 5 விதமான விதிகள்)
கடைபிடிப்பதால் மனம் கரைய அது உதவுகிறது

ஆயுர்வேதத்தில் வியாதிகளுக்கு மருந்துடன் கூட அந்த சமயத்தில் உணவு போன்ற மற்ற எல்லா விஷயங்களிலும் எந்த முறையை மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஜீவாத்மாக்கள் ஆயுர்வேத மருந்துடன் கூட யம, நியமாதிகளையும் கடைபிடிக்கிறார்கள். உட்கொள்ளும் மருந்துடன் தொடர்புள்ள யம, நியம விதிகளை பின்பற்ற வேண்டி இருப்பதால் ஜீவாத்மாக்கள் தங்கள் விருப்பப்படி நடப்பது தடுக்கப்படுகிறது. இது அவர்கள் மனம் கரைய ஓரளவு உதவுகிறது.

2 இ. உடல் வியாதி நிவாரணத்துடன் கூட
மனோ வியாதி, ஆன்மீக காரணங்களால் ஏற்படும்
கஷ்டங்கள் குறையவும் ஆயுர்வேதம் உதவுகிறது

முற்காலத்தில் மருத்துவர்கள் வியாதிகளின் மூல காரணத்தை கண்டறியும் வல்லமை வாய்ந்தவர்களாக திகழ்ந்தார்கள். எனவே அவர்கள் ஜீவாத்மாக்களுக்கு பல்வேறு மந்திரங்களை உருவேற்றி மருந்துகளை அளித்ததால் அவைகள் உடல் வியாதியுடன் கூட மனோவியாதி, ஆன்மீக காரணங்களால் ஏற்படும் கஷ்டங்கள் ஆகியவற்றிற்கும் நிவாரணமாக திகழ்ந்தன. அதேபோல் மனோநிலை பாதிக்கக்கூடிய எந்தெந்த செயல்களை செய்யக் கூடாது என்பதற்கும் வழிகாட்டியாக இருந்தன. உதாரணமாக எந்தெந்த காலங்களில் தாம்பத்ய உறவு கொள்ளலாம், எந்த காலங்களில் அது தவிர்க்கப்பட வேண்டும் என்பது போன்றவை. சுருக்கமாக சொல்வதானால் ஆயுர்வேத வைத்தியமுறை உடல் வியாதிக்கு மட்டுமல்லாமல் மன நிலை பாதிப்பு, ஆன்மீக காரணங்களால் ஏற்படும் கஷ்டங்கள் போன்றவை குறையவும் உதவியாக இருந்துள்ளது.

2 ஈ. உடலில் குறைவாக உள்ள
தத்துவங்களை அதிகரிக்க செய்வதற்கு உதவும்
ஆன்மீக பயிற்சி பற்றிய வழிகாட்டுதலை அளிக்கிறது

பலவகைப்பட்ட கடவுள் வழிபாட்டு முறைகள், பலவகையான ஆன்மீக பயிற்சி முறைகளுக்கு வழிகாட்டுவதன் மூலம் நமக்குத் தேவையான இறை தத்துவங்களை உணரச் செய்து அதன் மூலம் இறைவனுடன் தொடர்புள்ளவர்களாக செய்கிறது. ஆயுர்வேதமும் அதேபோன்று செயல்படுகிறது. பஞ்சபூத தத்துவங்கள் இறைவனின் உன்னத சக்தியாகும். ஒரு ஜீவனுள் இந்த பஞ்சபூத தத்துவங்களின் விகிதாசாரத்தில் ஏதேனும் மாறுபாடு ஏற்படுமாயின் அந்த ஜீவனின் கபம், பித்தம், வாதம் போன்றவையின் அளவும் அதிகரிக்கிறது. அதனால் அந்த ஜீவாத்மா பல வியாதிகளினால் துன்புறுகிறது. சரியான விகிதத்தில் கபம், வாதம், பித்தம், போன்றவை உடலில் இருப்பதற்கு தேவையான அறிவுரைகளை ஆயுர்வேதம் சொல்கிறது. அதாவது உடலில் உள்ள பஞ்சபூத தத்துவங்களின்படி பஞ்ச தத்துவங்களில் எந்த தத்துவம் குறைவு படுகிறதோ அதை அதிகரிக்க செய்கிறது. அதேபோன்று ஆயுர்வேதத்தில் அடங்கியுள்ள எட்டு தந்திரங்களில் (ஆயுர்வேதத்தின் கிளைகள்) பூதவித்யா என்பது ஒரு தந்திரமாகும். இறை தத்துவத்தால் அல்லது கிரஹ நிலைகளால் ஒரு ஜீவனுக்கு ஏற்படும் கோளாறுகளும் அதற்கான சிகிச்சை முறைகளும் இந்த பூதவித்யா தந்திரத்தில் அடங்கியுள்ளது.

3.வியாதிகளின் மூல காரணம்
அவரவர் பிராரப்தமாக இருந்தாலும் கூட
ஆயுர்வேதம் தோன்ற பின்னணியான காரணம்

ஒரு ஜீவாத்மாவிற்கு ஏற்படும் எல்லா வியாதிகளுக்கும் அவனது பிராரப்த கர்மா (இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டிய தலைவிதி) மட்டுமே காரணமாக அமைவது இல்லை. அவனது வியாதிகளுக்கு விதிகளுக்கு புறம்பாக அவன் தன்னிச்சையாக செயல்படுவதும் காரணமாகிறது. அதுபோன்று பிராரப்த கர்மாவினாலும் அவனது தன்னிச்சையான செயல்களாலும் உண்டாகும் வியாதிகளின் உபாதையை பொறுத்துக் கொள்வதற்காகவும் குணப்படுத்துவதற்காகவும் இறைவனால் கொடுக்கப்பட்ட விஞ்ஞானமே ஆயுர்வேதமாகும்.

4.பிராரப்த கர்மாவினால் ஏற்பட்ட
வியாதிகளை ஆயுர்வேத
சிகிச்சையினால் குணப்படுத்துவதன் நன்மைகள்

4 அ. ஜீவாத்மாவின் ஆன்மீக பயிற்சிக்கு
ஆயுர்வேதம் எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை

ஒரு ஜீவாத்மாவிற்கு வியாதி ஏற்படும்போது ஆரம்பத்தில் அவனது எதிர்ப்பு சக்தி செயல்படத் துவங்கி வியாதியை எதிர்த்துப் போராடுகிறது. வியாதிக்குக் காரணமான கிருமி பலம் பொருந்தியதாகவும் ஜீவாத்மாவின் எதிர்ப்பு சக்தி குறைவாகவும் இருந்தால் அப்போது வியாதியின் கடுமை அதிகமாகிறது. அந்த குறிப்பிட்ட வியாதியஸ்தர் ஆன்மீகம் பயில்பவராக இருந்தால் அவரது மன சக்தி செயல்படும் நிலையில் இருக்கும். பெரும்பாலான வியாதியஸ்தர்களுக்கு பிராரப்த கர்மாவினால் ஏற்பட்ட வியாதியை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் மனதளவிலும் உடலளவிலும் இருப்பதில்லை. கர்மாவினால் ஏற்பட்ட வியாதியை பொறுத்துக் கொண்டு அனுபவித்து தீர்த்து விட வேண்டும் என்பதையும் அவர்கள் அறியாமையினால் அறியவில்லை. எனவே அவர்கள் மிதமான விதியால் ஏற்படும் வியாதிகளை மனோபலத்தின் அடிப்படையில் அனுபவித்து தீர்த்து விடுகின்றனர். இதன் காரணமாக முற்பிறவிகளில் அவர்கள் பெற்றிருந்த ஆன்மீக பயிற்சியின் பலனை இழந்து விடுகின்றனர். இதுபோன்று வியாதிகளை அனுபவிக்க ஆன்மீக பயிற்சியின் பலனை செலவழித்து விடும் சமயங்களில் ஜீவாத்மா ஆன்மீக வளர்ச்சி பெறாமல் இருப்பதுடன் கூட அதற்கு ஆன்மீக வீழ்ச்சியும் ஏற்படுகின்றது. 71% ஆன்மீக நிலை இருந்தால்தான் வியாதியின் காரணம் பிராரப்தமா அல்லது தன்னிச்சையான செயல்களினாலா என்று புரிந்து கொள்ள முடியும். அதோடு கூட 71% ஆன்மீக நிலையில் உள்ள ஜீவாத்மா தனக்கு ஏற்பட்ட வியாதியை ஒரு சாக்ஷி உணர்வுடன் பார்க்கும் நிலையில் உள்ளது. பிராரப்த கர்மாவினால் ஏற்பட்ட வியாதியை அனுபவித்து தீர்த்து விட வேண்டும் என்று அறிந்திருப்பதால் குணப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எழுவதில்லை. 71% ஆன்மீக நிலைக்கு கீழே உள்ளவர்களுக்காக ஆயுர்வேதம்  வகுக்கப்பட்டுள்ளது. ஆயுர்வேதம் ஆன்மீக பயிற்சி செய்யும் ஒரு வழியாக அமைந்திருப்பதால் ஆயுர்வேத சிகிச்சையினால் உண்டாகும் சக்தி அந்த வியாதியை குணப்படுத்தி விடுவதால் அந்த ஜீவாத்மாவினால் செய்யப்பட்ட ஆன்மீக பயிற்சி அவனது வியாதியை குணப்படுத்த பயன்படுத்தப்படாமல் அவனது ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவுகிறது. இவ்வாறாக ஆயுர்வேத சிகிச்சையினால் வலிமை குறைந்த பிராரப்த கர்மாவினால் ஏற்படும் வியாதி குணப்படுத்தப்படுகிறது. மிதமான பிராரப்த கர்மாவினால் ஏற்படும் வியாதியின் தீவிரம் குறைக்கப்படுகிறது. தீவிர பிராரப்த கர்மாவினால் ஏற்படும் வியாதியை தாங்கிக் கொள்ளும் சக்தி ஏற்படுகிறது.

4 ஆ. ஆயுர்வேத சிகிச்சை ஜீவாத்மாவின்
மீது நடத்தப்படும் தீய சக்திகளின் தாக்குதல்களைக் குறைக்கிறது

ஒரு ஜீவாத்மா நோயில் விழும்போது அவனது உடலில் ரஜ-தம அணுக்கள் அதிகமாவதுடன் தீய சக்திகளை எதிர்த்துப் போராடும் அவனது உடல், மனம் மற்றும் ஆன்மீக சக்தி குறைகிறது. தீய சக்திகள் இந்த நிலையை பயன்படுத்திக் கொண்டு அந்த ஜீவாத்மாவைத் தாக்கி தங்களது ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டு பல வருடங்களுக்கு கஷ்டத்தைத் தருகிறது. அந்த ஜீவாத்மா மரணமடையும் தருவாயிலும் பலவீனமாகவே இருக்கிறது. தற்கால அலோபதி சிகிச்சை முறையும் மருத்துவ தொழில்நுட்பமும் ஜீவாத்மாவின் பிராணசக்தி மேலும் குறைய காரணமாகின்றன. இதன் காரணமாக பலவேறு அசுத்த வாயுக்கள் அந்த ஜீவாத்மாவின் உடலில் தோன்றுவதால் அதன் பிராணசக்தி மேலும் குறைந்து பிராணசக்தி ஓட்டத்தில் தடையை ஏற்படுத்துகிறது. அதனால் சூட்சும உடல் பிராணனை விட முடியாமல் கஷ்டப்படுகிறது. (ஜீவாத்மாவின் சுவாசத்திற்கு உதவும் ஐந்து முக்கிய சக்திகளில் பிராணசக்தி ஒன்றாகும்). மேலும் தீய சக்திகள் மிக எளிதாக சூட்சும உடலை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து பல லக்ஷக்கணக்கான வருடங்கள் தங்கள் அடிமையாய் வைத்திருக்கிறது. இதற்கு மாறாக ஆயுர்வேத சிகிச்சை ஜீவாத்மாவின் பிராணசக்தியை அதிகரிக்க செய்கிறது. பிராணசக்தி அதிகரிப்பதால் பிராணசக்தி ஓட்டத்தில் தடையேதும் ஏற்படுவதில்லை. எனவே மரணத் தருவாயில் பிராணசக்தியின் ஆதாரத்தில் சூட்சும உடலால் பூத உடலை விட்டு நீங்குவது எளிதாக இருக்கிறது. அதன் காரணமாக சூட்சும உடலுக்கு தீய  சக்திகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.

4 இ. ஆயுர்வேத சிகிச்சை ஜீவாத்மாவின் தேஹ
புத்தியை (உடல் பற்றை) குறைப்பதால் ஜீவாத்மாவின்
ஆன்மீக முன்னேற்றம் மேலும் ஏற்படுவது எளிதாகிறது

தற்கால நவீன மருந்துகளினாலும் மருத்துவ தொழில்நுட்பத்தினாலும் ஜீவாத்மா தன் உடலைப் பற்றிய நுட்பங்களை நன்கு உணர்ந்துள்ளான். அதன் காரணமாக மரணமடையும் தருவாயில் தன் உடலையும் அதனால் ஏற்பட்ட பற்றுதல்களையும் தியாகம் செய்வது கடினமாக இருக்கிறது. மாறாக பல்வேறு ஆயுர்வேத சிகிச்சை முறைகளான  பிரார்த்தனை, ஸ்தோத்திரங்கள், உணவுக்கட்டுப்பாடு போன்றவை ஜீவாத்மாவின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவதால்  ஜீவாத்மாவின் மனம் எப்போதும் இறைவனுடன் தொடர்பில் உள்ளது. அத்துடன் ஜீவாத்மா, உடல் வேறு அந்தர்யாமியாய் உள்ள ஆத்மா வேறு என்ற ஆன்மீக உணர்வைப் பெறுவதால் அது ஜீவாத்மாவின் உடல் பற்றை (தேஹ புத்தியை) குறைக்கிறது. அதன் காரணமாக அந்த ஜீவாத்மா மரணமடையும் தருவாயில் ஸ்தூல உடலுடனான பற்றுதலை எளிதாகத் துறந்து வெளியேறுகிறது.

4 ஈ. ஜீவாத்மாவின் ஆன்மீக
முன்னேற்றத்திற்கு உதவும் ஆயுர்வேத சிகிச்சை

ஆயுர்வேத சிகிச்சையின் மூலம் ஜீவாத்மாவின் நோயுற்ற உடல் பகுதியிலும் பிராணசக்தி செலுத்தப்படுகிறது. அதனால் பிராரப்த கர்மாவினால் உண்டான வியாதியினால் ஜீவாத்மா பாதிக்கப்பட்டாலும் தீய சக்தியினால் நோயுற்ற பகுதியைத் தாக்கி அங்கு மையத்தை உருவாக்க முடியாமல் போகிறது. ஆயுர்வேத சிகிச்சையின் காரணமாக தேவைப்பட்ட அளவு பிராணசக்தி மேல் நோக்கியோ அல்லது கீழ் நோக்கியோ செலுத்தப்படுகிறது. பிராணசக்தியின் மேல் நோக்கிய ஓட்டத்தால் குண்டலினி சக்தி விழிப்படைகிறது. இதனால் ஜீவாத்மா வியாதியினால் பாதிக்கப்பட்டாலும் குண்டலினி சக்தியுடன் தொடர்புடைய ஆன்மீக பயிற்சியை செய்து அந்த குறிப்பிட்ட குண்டலினி சக்கரம் விழிப்படைவதால் அந்த ஜீவாத்மா ஆன்மீக முன்னேற்றம் அடைகிறது. அதோடு கூட கீழ் நோக்கி செலுத்தப்படும் பிராணசக்தி ஓட்டத்தால் உடலில் பல்வேறு வாயுக்கள் உற்பத்தி ஆகின்றன. அந்த வாயுக்கள் உடலின் பல்வேறு செயல்பாடுகள் எளிதாக நடக்க உதவுகிறது. சுருக்கமாக சொல்வதானால் ஆயுர்வேத சிகிச்சை ஜீவாத்மாவின் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுவதாக அமைந்துள்ளது.

4 உ. முடிவுரை

சமூக நலனுக்காக இறைவனால் ஆயுர்வேத சிகிச்சை சமுதாயத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜீவாத்மா தீவிர பிராரப்த கர்மாவினால் பாதிக்கப்பட்டு வியாதியினால் பீடிக்கப்பட்டாலும் ஆயுர்வேத சிகிச்சை அந்த ஜீவாத்மாவின் உடல், மனம், ஆன்மீகம் ஆகிய மூன்று நிலைகளிலும் உதவுவதாக அமைந்துள்ளது. எனவே ஜீவாத்மா வியாதியினால் பீடிக்கப்பட்ட நிலையிலும் ஆன்மீக பயிற்சி செய்து அதன் மூலம் ஆன்மீக முன்னேற்றம் அடைய முடிகிறது.
–        திரு நிஷாத் தேஷ்முக், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (22.8.2018, மதியம் 12.51)

5.பிராரப்த கர்மாவினால் வியாதி
ஏற்படுகிறதெனில் ஏன் ஆயுர்வேத
வைத்தியமுறை பரிந்துரைக்கப்படுகிறது?

வைத்ய மேகராஜ் மாதவ் பராட்கர்

அதர்மமே வியாதிகளுக்கான மூல காரணம். சத்ய யுகத்தில் தர்மமமானது உண்மை, தூய்மை, தானம், தவம் ஆகிய நான்கு கால்களில் நின்றது. அதனால் அந்த யுகத்தில் வியாதிகளே இல்லாமல் இருந்தது. த்ரேதா யுகத்தில் உண்மை என்ற ஒரு கால் ஒடிந்து விட்டதால் தவறான செயல்கள் நடக்க ஆரம்பித்து ஒழுங்குமுறை தவற ஆரம்பித்தது. இது ரிஷிகளின் ஆன்மீக பயிற்சிக்கு தடங்கலாக இருக்க ஆரம்பித்தது. இந்த இடையூறுகளைத் தவிர்ப்பதற்காக பாரத்வாஜ முனிவர் இந்திரனிடமிருந்து ஆயுர்வேத சிகிச்சை முறையை கற்றுக் கொண்டு பிற முனிவர்களுக்கும் கற்பித்தார். (தகவல் : சூத்ரஸ்தான் அத்தியாயம் 1) இவ்வாறாக பலவகைப்பட்ட ஒழுங்கீனங்களாக தோன்ற ஆரம்பித்த இடையூறுகளை நீக்கி முனிவர்களின் ஆன்மீக பயிற்சி செவ்வனே நடைபெற உதவுவதற்காக ஆயுர்வேதம் பூமியில் தோன்றியது.

பிராரப்த கர்மாவை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். இருந்தாலும் ஆன்மீக பயிற்சி அதன் தீவிரத்தை குறைக்க உதவுகிறது. இதற்காக ஆயுர்வேதம், ‘தெய்வ வியாபஸ்ரய சிகிச்சை’யை பரிந்துரைக்கிறது. ‘தெய்வ வியாபஸ்ரய சிகிச்சை’ என்றால் நன்னடத்தை விதிகளைக் கடைபிடிப்பது, நாமஜபம் செய்வது, மந்திரங்களை ஓதுவது, பரிஹாரங்களை செய்வது, யக்ஞம், சாந்தி விதி போன்ற ஆன்மீக பயிற்சிகளை செய்வதாகும்.

எல்லா கஷ்டங்களுமே பிராரப்த கர்மாவினால் ஏற்படுவதில்லை. தன்னிச்சைப்படி செய்யும் சில தவறான செயல்களாலும் இவை ஏற்படுகின்றன. ஆயுர்வேதம் இந்த தவறான செயல்முறைகளை ஒழுங்கான சரியான செயல்முறைகளாக மாற்றியமைக்கவும் வியாதியை குணப்படுத்தவும் வழிகாட்டி உதவுகிறது.

நமது இந்தப் பிறவியின் தன்னிச்சையான செயல்கள் அடுத்த பிறவியின் பிராரப்த கர்மாக்களாக அமைகின்றன. எனவே நமது இந்தப் பிறவியின் தன்னிச்சையான செயல்கள் தவறாக அமைந்து நமது அடுத்த பிறவியில் பிராரப்த கர்மாக்கள் குவியாமல் இருப்பதற்கு நாம் ஆயுர்வேத வாழ்க்கை விதிமுறைகளை கடைபிடிப்பது நல்லது.
–        வைத்ய மேகராஜ் மாதவ் பராட்கர், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (22.8.2018)

6. ஆயுர்வேதம் – வியாதியின் மூல காரணம்
மற்றும் நிவாரணத்தைக் கூறும் ஒரே சிகிச்சை முறை !

நவீன மருத்துவம்  ஆயுர்வேதம் 
1. மருந்துகளின் பலன் இவ்வகை மருந்துகள் ரசாயன, செயற்கை மருந்துகள் என்பதால் நீண்ட காலத்திற்கு உட்கொள்வதால்  உடல் பகுதிகள் பாதிக்கப்படும். மனித உடலுடன் ஒத்துப் போகும் மருத்துவ மூலிகைகளாலான ஆயுர்வேத மருந்துகளால் எந்த பக்கவிளைவும் ஏற்படுவதில்லை, அவை உடலியக்க முறையுடன் கலந்து விடுகின்றன.
2. மருந்துகளின் பலனின் பரப்பளவு உடல் உடல் மற்றும் மனம்
3. பரிசீலனை முறை அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டது ஆயுர்வேதம் ‘உபவேத’மாக இருப்பதால், ‘வாதம்’, ‘கபம்’, ‘பித்த’த்தின்படி மூல காரணத்தில் செயல்பட்டு ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.
4. ‘ஆதிதைவீக (தீய சக்திகள் மற்றும் கீழ்நிலை தெய்வங்களால் ஏற்படும் கஷ்டங்கள்; உதாரணத்திற்கு தீவிர வானிலை, பூகம்பம், அதிக மழை, வறட்சி) சிகிச்சை’ (சிகிச்சை முறை) மற்றும் ‘க்ரஹபேத சிகிச்சை’ (க்ரஹங்களினால் ஏற்படும் பாதிப்புகள்) இல்லை உண்டு
5. கருத்தரிக்கும் முன்பு உயர்தரம் வாய்ந்த கருமுட்டை மற்றும் விந்து உற்பத்தியாவதற்கான சிகிச்சை இல்லை ஆரோக்கியமான சந்ததியினர் உருவாக கருத்தரிப்பதற்கு முன்பே உயர்தரம் வாய்ந்த கருமுட்டை மற்றும் விந்து உற்பத்தியாவதற்கான சிகிச்சைமுறையை ஆயுர்வேதம் வழங்குகிறது. கருத்தரித்த பின்பு வளரும் கருவின் போஷாக்கிற்கும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் ஆயுர்வேத கஷாயங்களைத் தரும் சிகிச்சை முறையும் உள்ளது.
தகவல் : தினசரி ஸனாதன் பிரபாத் 

Leave a Comment