குங்குமம்

நம் பாரத கலாச்சாரத்தில் முக்கிய அங்கம் வகிப்பது குங்குமம். இயற்கையான மஞ்சள் கிழங்கிலிருந்து தயாரிக்கப்படுவதே குங்குமம் ஆகும். அதில் பூமி தத்துவம் அதிகம் உள்ளது. ஆனால் இன்றோ இயற்கையான குங்குமத்தின் இடத்தை செயற்கையான ஸ்டிக்கர் பொட்டு பிடித்துள்ளது. விலை உயர்ந்த கற்கள், மணிகள் பதித்த பல வகையான ஸ்டிக்கர் பொட்டுக்கள் இப்பொழுது கிடைகின்றன. அதற்கும் ஒருபடி மேலே போய் மேற்கத்திய கலாச்சார மோகத்தால் நெற்றியில் பொட்டு வைப்பதே அரிதாகி விட்டது.

 

குங்குமம் இடுவதன் சூட்சும பலன்

குங்குமம் ஸாத்வீகமானதால், தெய்வீக, தத்துவத்தை ஆகர்ஷிக்கிறது. வட்ட சுழற்சி வடிவில் இந்த தெய்வீக தத்துவம் வெளிப்படுகிறது. குங்குமம், சைதன்ய ப்ரவாஹத்தை ஆகர்ஷிக்கிறது. பின்பு வட்ட சுழற்சி வடிவில் அதை வெளியிடுகிறது. குங்குமம் அணிந்திருக்கும் பெண்ணின் உடலில் சைதன்யம் பரவி அங்கு சேர்ந்துள்ள கருப்பு சக்தியை அழிக்கிறது. அவளைச் சுற்றி ஒரு சைதன்ய கவசம் ஏற்பட்டு அதனால் அவளது உடலும், மனமும் தூய்மையடைகிறது.

 

குங்குமத்தால் ஏற்படும் அதிர்வலைகள்

சதவிகிதம்

சக்தி 3%
சைதன்யம் 2%
தெய்வீக தத்துவம் 2%

 

குங்குமத்தால் ஏற்படும் நன்மை

1. குங்குமம் இடும் போது நெற்றியின் மத்தியில் ஆக்ஞா சக்கரத்தில் அழுத்தம் ஏற்படுகிறது. அதனால், முக தசைகளுக்கு ரத்தஓட்டம் கிடைக்கிறது.

2. குங்குமம் அணிவதால், சக்தி தத்துவத்தை ஈர்க்கும் ஆற்றல் ஒரு பெண்ணுக்கு ஏற்படுகின்றது.

3. குங்குமம் அணிவதால் ஒரு பெண்ணின் ஆன்மீக உணர்வு விழிப்படைகிறது.

4. இந்த ஆத்ம சக்தியால், சக்தி தத்துவத்தின் காக்கும் மற்றும் அழிக்கும் அதிர்வலைகளை ஆகர்ஷிக்கும் சக்தி ஏற்படுகின்றது.

5. ஒரு பெண்ணுக்குள் இருக்கும் காக்கும் சக்தி தத்துவ அதிர்வலைகள்
விழிப்படைகின்றன. அதனால் சுற்றுப் புற சூழலில் உள்ள சக்தி தத்துவத்தின் சூட்சும துகள்கள் அப்பெண்ணால் ஆகர்ஷிக்கப்படுகின்றன.

6. குங்குமத்தால், தீய சக்திகள், ஆக்ஞா சக்கரத்தின் மூலம் பெண்ணின் உடலுள் நுழைய முடியாமல் தடுக்கப்படுகின்றன.

 

திருமணமான பெண் நெற்றி வகிட்டில்
குங்குமம் /சிந்தூரம் வைப்பதன் பலன்

1. முற்காலத்தில், திருமணமான பெண்ணின் வகிட்டில் உள்ள குங்கும / சிந்தூரத்தைப் பார்க்கும் பொழுது, ஆணின் வீர உணர்ச்சியும், உற்சாகமும் அதிகமாயின.

2. இப்பகுதியை தீய சக்திகளின் தாக்குதலிலிருந்து பாதுகாக்க, அங்கு சிந்தூரம் வைக்கப்பட்டது. ஆன்மீக சாஸ்திரம் என்னவென்றால், குங்குமத்திலுள்ள மாரக சக்தியால் (அழிக்கும் சக்தியால்) பெண்ணின் சூட்சும தேகம் தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. குங்குமத்தைக் காட்டிலும் சிந்தூரத்தில் இந்த அழிக்கும் சக்தி
குறைவாகவே உள்ளது. அதனால் சிந்தூரத்தைக் காட்டிலும் குங்குமமே அதிக பலனை அளிக்கவல்லது.

இக்காரணங்களால் மனோரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் இவ்வழக்கம் ஏற்பட்டது.

 

சாஸ்திரப்படி ஏன் விதவைகள் குங்குமம் அணியக்கூடாது?

1. கணவன் இறந்த பின் குங்குமம் வைக்கும் போது, மனைவி அவனை நினைக்கிறாள். அதனால், கணவனின் சூட்சும தேகம் மறுபடியும் பூலோகம் வரும்படியான கட்டாயம் ஏற்படுகிறது.

2. கணவன் இறந்த பின், மனைவியின் மனதில் பற்றுதலற்ற வைராக்கியம் ஏற்படுவது அவசியமாகிறது. அதனால் திருமணமான பெண்ணுக்கு அடையாளமான நகைகளை அவள் தியாகம் செய்ய வேண்டும். இந்த செயல்கள் அவளை ஆத்மானுபவப் பாதையில் இட்டுச் செல்கிறது.

போதிய தர்ம போதனை இல்லாத காரணத்தாலும், மேற்கத்திய கலாச்சார பாதிப்பாலும் கணவன் இறந்தால் என்ன? என்ற கேள்வி கேட்கப்பட்டு, சாஸ்திர விரோத காரியங்களான குங்குமம் இட்டுக் கொள்வது, தாலி அணிவது போன்றவை நடக்கின்றன. இவ்வாறு செய்வதால், ஆன்மீக ரீதியாக இறந்த கணவனின் சூட்சம தேகத்திற்கு பெருந்தீங்கு ஏற்படுகிறது. இதைத் தடுப்பதற்கு அன்றாட வாழ்க்கையில் தார்மீக நெறியை கடைபிடிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

 

Leave a Comment