ஆளுமை குறைகளைக் களையும் செயல்முறையை பின்பற்றிய பின்னர் ஸாதகர்களிடம் ஏற்பட்ட பரிணாமத்தின் விஞ்ஞான பரிசோதனை

யு.டி.எஸ். (யுனிவர்சல் தெர்மோ ஸ்கேனர்)
உபகரணத்தின் மூலமாக மகரிஷி ஆன்மீக
பல்கலைகழகம் நடத்தியுள்ள விஞ்ஞான பரிசோதனை

வாழ்க்கையில் எந்த ஒரு கடினமான நிகழ்விலும் மானசீக சமநிலை குலையாமல் இருப்பதற்கும் எப்பொழுதும் ஆதர்சமான காரியங்களை செய்வதற்கும் ஒருவரின் மனோபலம் உத்தமமான நிலையிலும் அவரின் ஆளுமை ஆதர்சமாகவும் இருத்தல் வேண்டும். ஆளுமை குறைகள் ஒருவரின் மனதை பலவீனமாக்குகின்றது. ஆனால் ஒருவரின் குணங்கள் அவரின் ஆளுமையை ஆதர்சமாக்க உதவுகின்றன. அதனால் ஆதர்ச ஆளுமையை வளர்த்துக் கொள்ள ஆளுமை குறைகளைக் களைந்து குணங்களை வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியமாகிறது. இறைவனை அடைவதற்கான முயற்சியில் அதாவது ஸாதனையில் முக்கியமான தடைகற்களாக நம் ஆளுமை குறைகள் (ஷட்ரிபு) விளங்குகின்றன. காமம், குரோதம் போன்ற ஆறு பகைவர்களின் தாக்கத்தால் பல மஹாதபஸ்விகளான முனிச்ரேஷ்டர்கள் மற்றும் புண்ணியவான்களான ராஜாக்கள் பரம உன்னத நிலையிலிருந்து வீழ்ந்துள்ளனர். இதற்கான அநேக உதாரணங்கள் நம் புராணங்களில் உள்ளன. சச்சிதானந்த இறைவனுடன் ஐக்கியமாவதே எந்த யோக வழிப்படி ஸாதனை செய்யும் ஸாதகராக இருந்தாலும் அவரின் இலக்காக உள்ளது. ஸனாதன் ஸன்ஸ்தாவின் ஸ்தாபகரான பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் குருக்ருபாயோக ஸாதனையின் ஒரு அங்கமாக (குறிப்பு 1) ஆளுமை குறைகளைக் களைதல் செயல்முறையை (குறிப்பு 2) ஸாதகர்களுக்கு வழங்கியுள்ளார். ஸாதகர்கள் ஆளுமை குறைகளைக் களையும் செயல்முறையை உண்மையான ஆர்வத்துடன் செய்யும்போது அவர்களின் ஆளுமை குறைகள் விரைவில் குறைவதைக் காண முடிகிறது. அத்துடன் அவர்களின் ஆனந்தமும் அதிகமாகிறது. உள்நாடு-வெளிநாடுகளிலிருந்து பல ஸாதகர்கள் ஆளுமை குறைகளைக் களையும் செயல்முறையை நன்கு கற்றறிய கோவாவிலுள்ள ராம்நாதி ஆச்ரமத்திற்கு வருகை தருகின்றனர். ஆளுமை குறைகளைக் களைவதால் ஆன்மீக கண்ணோட்டத்தில் ஸாதகர்களின் மீது என்ன பரிணாமம் ஏற்படுகிறது? இதை விஞ்ஞான கண்ணோட்டத்தில் ஆய்வு செய்வதற்காக மகரிஷி ஆன்மீக பல்கலைகழகம் ஒரு பரிசோதனை செய்தது. இந்த பரிசோதனைக்காக யு.டி.எஸ். (யுனிவர்ஸல் தெர்மோ ஸ்கேனர்) என்ற உபகரணம் உபயோகப்படுத்தப்பட்டது. மற்றும் அன்று ராம்நாதி, கோவாவிலுள்ள ஸனாதன் ஆச்ரமத்தில் இந்த பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையின் ஸ்வரூபம், ஆய்வு மற்றும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பு 1 – குருக்ருபாயோகப்படியான ஸாதனை

பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களால் வழங்கப்பட்ட குருக்ருபாயோக ஸாதனை என்பது கர்மயோகம், பக்தியோகம் மற்றும் ஞானயோகம் ஆகிய மூன்றின் அழகான சங்கமமாகும். இதில் ஆளுமை குறைகளைக் களைதல், அஹம்பாவத்தை நீக்குதல், நாமஜபம், ஸத்சங்கம், ஸத்சேவை, ஆன்மீக உணர்வு விழிப்படைதல், தியாகம் மற்றும் ஆன்மீக அன்பு என்ற வ்யஷ்டி (தனிமனித) அஷ்டாங்க ஸாதனையும் சமூகத்தில் ஸாதனை பற்றிய பிரசாரம் செய்யும் ஸமஷ்டி (சமூக) ஸாதனையும் அடங்கியுள்ளது. இதன் மூலமாக ஸாதகருக்கு குறைந்த காலத்திற்குள் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுகிறது. இதை ஸனாதனின் ஸாதகர்கள் அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளனர். இதைப் பற்றிய விரிவான விளக்கங்கள் ஸனாதனின் நூலான குருக்ருபாயோகப்படியான ஸாதனை என்பதில் கொடுக்கப்பட்டுள்ளது.

 

குறிப்பு 2 – ஆளுமை குறைகளைக் களையும் செயல்முறை

ஆளுமை குறைகளால் ஒருவர் மீது உடல், மனம், புத்தி, குடும்பம், சமூகம் மற்றும் ஆன்மீக நிலையில் தீய விளைவு ஏற்படுகிறது. ஆளுமை குறைகளால் ஏற்படும் தீய விளைவு நீங்கவும் வாழ்வை சுகமாகவும் வெற்றியோடும் வாழவும் ஒருவரின் ஆளுமை குறைகளைக் களைந்து சித்தத்தில் குணங்களின் ஸன்ஸ்காரங்களை நிர்மாணிக்கும் செயல்முறையை ‘ஆளுமை குறைகளைக் களையும் செயல்முறை’ எனக் கூறுகின்றனர்.

தகவல் : ஸனாதனின் நூல் ‘ஆளுமைக் குறைகளைக் களைவதன் மகத்துவம் (மற்றும் குணங்களை வளர்ப்பதன் செயல்முறை)’

1. பரிசோதனையின் ஸ்வரூபம்

இந்த பரிசோதனையில் பங்கெடுத்த ஒரு ஆண் ஸாதகரும் ஒரு பெண் ஸாதகரும் சில வருடங்களாக குருக்ருபாயோகப்படி ஸாதனை செய்து வருகின்றனர்; ஆனால் அவர்கள் இந்த காலகட்டத்தில் தங்களின் ஆளுமை குறைகளைக் களைய விசேஷ முயற்சி எதுவும் எடுக்கவில்லை. அதனால் அவர்களின் ஆளுமை குறைகள் அவர்களின் ஸாதனையில் தடைகளை ஏற்படுத்தி வந்தன. இவர்கள் இருவரும் கோவாவிலுள்ள (ராம்நாதி) ஸனாதன் ஆச்ரமத்தில் தங்கி ஆளுமை குறைகளைக் களையும் செயல்முறையை எவ்வாறு செய்வது? என்பது பற்றி நிபுணர்களிடமும் மூத்த ஸாதகர்களிடமும் வழிகாட்டுதல் பெற்று கற்றனர் மற்றும் உண்மையுடன் நடைமுறைப்படுத்த முயன்றனர். ஆளுமை குறைகளைக் களையும் செயல்முறையை ஆரம்பிக்கும் முன்னர் யு.டி.எஸ். உபகரணத்தின் மூலமாக அவர்கள் பரிசோதனை செய்யப்பட்டனர். ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு அவர்கள் இந்த செயல்முறையை நடைமுறைப்படுத்திய பிறகு மீண்டும் இருவரும் பரிசோதனை செய்யப்பட்டனர். இவ்விரண்டு பரிசோதனைகளும் ஒப்பீடு செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இதிலிருந்து ஆளுமை குறைகளைக் களையும் செயல்முறையை நடைமுறைப்படுத்தியதால் இரு ஸாதகர்களுக்கும் என்ன நன்மை ஏற்பட்டன என்பது கவனத்திற்கு வந்தது.

வாசகர்களுக்கு ஒரு குறிப்பு

இடமின்மை காரணமாக இந்த கட்டுரையில் யு.டி.எஸ். உபகரணத்தின் அறிமுகம், உபகரணத்தின் மூலம் பரிசோதனை செய்யப்படும் பொருள் மற்றும் அவற்றின் விவரங்கள், பொருளின் ஒளிமண்டல அளவீடு, பரிசோதனை செய்யும் வழிமுறை மற்றும் பரிசோதனையில் சமநிலை வருவதற்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகிய பொதுவான குறிப்புகள் தரப்படவில்லை; அவை தினசரி ஸனாதன் பிரபாத்-ன் வலைதளத்தின் goo.gl/mxCxCn என்ற இணைப்பில் தரப்பட்டுள்ளன. இந்த இணைப்பில் சில காபிடல் எழுத்துக்களும் உள்ளன.

2. ஆளுமை குறைகளைக் களையும் செயல்முறையை பின்பற்றியதால் ஒரு ஆண் ஸாதகர் மற்றும் பெண் ஸாதகர் மீது ஏற்பட்ட பரிணாமத்தின் ஆய்வு மற்றும் அதன் விளக்கம்

2 அ. எதிர்மறை சக்தி சம்பந்தமான ஆய்வு மற்றும் விளக்கம்

ஆளுமை குறைகளைக் களையும் செயல்முறையை ஆரம்பிப்பதற்கு முன்பு ஆண் ஸாதகரிடம் எதிர்மறை சக்தி இல்லாமல் இருத்தல் மற்றும் பெண் ஸாதகரிடம் அதிக அளவில் எதிர்மறை சக்தி இருத்தல் மற்றும் செயல்முறை செய்ய ஆரம்பித்த பின்பு பெண் ஸாதகரின் எதிர்மறை சக்தி மிகவும் குறைதல்
செயல்முறையை ஆரம்பிப்பதற்கு முன்பும் பின்பும் ஆண் ஸாதகர் மீது இன்ஃப்ராரெட் மற்றும் அல்ட்ராவயலட் சக்தி தென்படவில்லை. செயல்முறையை ஆரம்பிப்பதற்கு முன்பு பெண் ஸாதகரின் இன்ஃப்ராரெட் சக்தியை அளக்கும்போது யு.டி.எஸ். ஸ்கேனர் 180 டிகிரி கோணத்தில் விரிந்தது. இந்த எதிர்மறை சக்தியின் ஒளிமண்டலம் 1.09 மீட்டர் தூரம் இருந்தது. பெண் ஸாதகர் ஒரு மாதம் செயல்முறை செய்ய ஆரம்பித்த பிறகு மீண்டும் அவரின் எதிர்மறை சக்தியை அளக்கும்போது அது பெரிய அளவில் குறைந்திருப்பது தெரிய வந்தது. (அந்த சமயத்தில் ஸ்கேனர் வெறும் 45 டிகிரி கோணமே விரிந்தது.) இக்காரணத்தால் இந்த சக்தியின் ஒளிமண்டலத்தை அளக்க முடியவில்லை.

2 ஆ. நேர்மறை சக்தி சம்பந்தமான ஆய்வு மற்றும் விளக்கம்

ஆளுமை குறைகளைக் களையும் செயல்முறையை பின்பற்ற ஆரம்பித்த பின்னர் இரு ஸாதகர்களிடமும் சிறு அளவில் இருந்த நேர்மறை சக்தி அதிகரித்தல்
எல்லா மனிதர்கள், வாஸ்து மற்றும் பொருட்களில் நேர்மறை சக்தி இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. செயல்முறையை ஆரம்பிப்பதற்கு முன்பு இரு ஸாதகர்களிடமும் நேர்மறை சக்தி வெகு குறைவாக இருந்தது. அந்த சமயத்தில் இரு ஸாதகர்களிடமும் ஸ்கேனர் 30 டிகிரி அளவே விரிந்தது. இந்த இரு ஸாதகர்களும் எப்பொழுது 1 மாதமாக செயல்முறையை செய்தனரோ அப்பொழுது அவர்களின் நேர்மறை சக்தி அதிகமானது. அந்த சமயத்தில் ஸ்கேனர் ஆண் ஸாதகர் மற்றும் பெண் ஸாதகருக்கு முறையே 120 மற்றும் 100 டிகிரி அளவு விரிந்தது.

2 இ. ஸாதகர்களின் ஒளிமண்டலம் சம்பந்தமான ஆய்வு மற்றும் விளக்கம்

 ஆளுமை குறைகளைக் களையும் செயல்முறையை ஒரு மாதம் செய்த பின்னர் இரு ஸாதகர்களின் ஒளிமண்டலம் அதிகமாதல்

சாதாரண மனிதர் அல்லது பொருளின் ஒளிமண்டலம் தோராயமாக 1 மீட்டர் இருக்கும். செயல்முறையை ஆரம்பிக்கும் முன்பு ஆண் ஸாதகர் மற்றும் பெண் ஸாதகரின் ஒளிமண்டலம் முறையே 1.52 மீட்டரும் 1.50 மீட்டரும் இருந்தன. செயல்முறை செய்ய ஆரம்பித்து ஒரு மாதம் கழிந்த பிறகு அவர்களின் ஒளிமண்டலம் முறையே 1.74 மீட்டரும் மற்றும் 1.60 மீட்டரும் இருந்தன. அதாவது இருவரது ஒளிமண்டலமும் முறையே 22 செ. மீ. மற்றும் 10 செ.மீ. அதிகரித்துள்ளன.

 

3. பரிசோதனையின் ஆய்வைப்
பற்றி ஆன்மீக சாஸ்திரபூர்வ விளக்கம்

3 அ. பெண் ஸாதகரிடமிருந்த எதிர்மறை
சக்தி அதிக அளவு குறைந்ததன் மற்றும்
அவரின் நேர்மறை சக்தி அதிகரித்ததன் காரணம்

செயல்முறை செய்ய ஆரம்பிக்கும் முன்பு இந்த பெண் ஸாதகரின் மன நிலை எதிர்மறையாக இருந்தது. அவரிடம் ஸாதனை பற்றிய உற்சாகம் குறைவாக இருந்தது. அவர் ஸாத்வீகமான இடத்தில் அதாவது ஸனாதனின் ராம்நாதியில் உள்ள ஆச்ரமத்திற்கு வந்து செயல்முறையை செய்ய முடிவெடுத்தார்; அத்துடன் ஒரு மாதத்திற்கு இந்த செயல்முறையை உண்மையாக செய்து அதன் மூலமாக தன்னுடைய ஆளுமை குறைகளான எதிர்மறை எண்ணங்கள் போன்றவற்றை நீக்குவதற்கு முயற்சி செய்தார். இது சம்பந்தமாக அவருக்கு உயர்நிலை ஸாதகர்கள் மற்றும் மகான்களின் வழிகாட்டுதல் கிடைத்தது. ஆச்ரமத்திலுள்ள ஸாதனைக்கு ஏற்ற ஸாதகமான சூழலையும் அவர் பயன்படுத்திக் கொண்டார். இந்த ஸாத்வீக சூழல் காரணமாக அவர் மீது ஆன்மீக நிவாரணமும் நடைபெற்றது. அதன் மூலமாக அவரை சூழ்ந்துள்ள எதிர்மறை அதிர்வலைகள் அழிய ஆரம்பித்தன, அத்துடன் நேர்மறை அதிர்வலைகள் தோன்ற ஆரம்பித்தன. செயல்முறையை ஒரு மாதம் செய்து முடித்த பின்னர் யு.டி.எஸ். ஸ்கானர் மூலமாக செய்யப்பட்ட ஆய்வின் மூலமாகவும் அவரின் எதிர்மறை சக்தி மிகவும் குறைந்து நேர்மறை சக்தி அதிகரித்துள்ளதை நிரூபணம் செய்ய முடிந்தது. இந்த ஸாதகரின் வ்யஷ்டி ஸாதனை நடப்பதற்கு வழிகாட்டுதல் வழங்கும் உயர்நிலை ஸாதகரும் அவர் முழு முயற்சியுடன் செயல்முறை செய்ததாக கூறினார். இக்காரணத்தால் அவரின் உற்சாகம் அதிகரித்து ஆனந்தம் கிடைக்க ஆரம்பித்தது. இந்த விஞ்ஞான பரிசோதனை மூலம் ஸாதனை செய்வதற்குரிய சூழல் கிடைத்து, அதைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு ஸாதகர் ஆளுமை குறைகளைக் களைதல் செயல்முறையை முழு முயற்சியுடன் செய்தால் ஆன்மீக கண்ணோட்டத்தில் அவருக்கு மிகுந்த பலன் கிடைக்கிறது என்பது நிரூபணமாகிறது. நம்மிடம் தீவிர ஆளுமை குறைகள் இருந்தால் சூழலில் உள்ள தீய சக்திகள் நம்முள் ஸ்தானத்தை ஏற்படுத்தி நுழைவது சுலபமாகிறது. அதனால் தீய சக்திகளின் தாக்குதலிலிருந்து தப்பிக்க இந்த செயல்முறையை செய்வது அவசியமாகிறது.

3 ஆ. ஆண் ஸாதகர் ஒரு மாதம் ஆளுமை
குறைகளைக் களையும் செயல்முறையை
ஆரம்பிப்பதற்கு முன்பு அவரிடம் எதிர்மறை சக்தி
இல்லாதிருந்தாலும் பெண் ஸாதகருடன் ஒப்பிடும்போது
அவரின் நேர்மறை சக்தி அந்த அளவிற்கு
அதிகரிக்கவில்லை; இதன் காரணம் பெண் ஸாதகருடன் ஒப்பிடும்போது அவர் ஆளுமை குறைகள்
மற்றும் அஹம்பாவத்தை நீக்கும் முயற்சியை குறைவாக செய்தது

பரிசோதனையில் பங்கெடுத்த ஸாதகர்கள் ராம்நாதியில் உள்ள ஸனாதன் ஆச்ரமத்திற்கு வந்து ஒரு மாதம் செயல்முறையில் ஈடுபட்டார்கள். ஸாதனைக்கு உகந்த சூழல் உடைய ஆச்ரமத்தின் ஸாத்வீக சூழலால் அவர்கள் பயனடைந்தனர். இதன் காரணமாக அவர்களின் நேர்மறை சக்தி அதிகரித்தது; ஆனால் ஆண் ஸாதகர் ஆளுமை குறைகளைக் களையும் செயல்முறையை ஆரம்பிப்பதற்கு முன்பு அவரிடம் எதிர்மறை சக்தி இல்லாதிருந்தாலும் பெண் ஸாதகருடன் ஒப்பிடும்போது அவரின் நேர்மறை சக்தி அந்த அளவிற்கு அதிகரிக்கவில்லை. பெண் ஸாதகருடன் ஒப்பிடும்போது ஆண் ஸாதகர், ஆளுமை குறைகளைக் களைவதிலும் அஹம்பாவத்தைக் குறைப்பதிலும் அந்த அளவு முயற்சி செய்யவில்லை என்று இவர்களுக்கு வழிகாட்டும் உயர்நிலை ஸாதகர் கூறினார். ஆண் ஸாதகரும் பெண் ஸாதகரைப் போன்றே அதிக முயற்சி செய்திருந்தால் நிச்சயம் அவருக்கு அதிக பயன் கிடைத்திருக்கும். இதிலிருந்து ஸாதனை செய்வதற்கு சாதகமான சூழலுடன் கூட நம்முடைய சொந்த முயற்சியும் (க்ரியமாண்) மிகவும் மகத்துவம் வாய்ந்தது என்பது தெரிய வருகிறது.

3 இ. பெண் ஸாதகரைக் காட்டிலும் ஆண் ஸாதகரின்
ஒளிமண்டலம் சிறிது அதிகமாக இருப்பதன் காரணம்

பரிசோதனையின் ஆரம்பத்தில் இரு ஸாதகர்களின் ஒளிமண்டலமும் சரி சமமாக இருந்தன. பரிசோதனை ஆரம்பத்தில் பெண் ஸாதகரிடம் அதிக அளவு எதிர்மறை சக்தி இருந்தது. ஸாதனையின் மூலமாக கிடைத்த நேர்மறை சக்தி அவரின் கஷ்டம் தரும் சக்தியை நஷ்டமடைய செய்ய செலவானது; அதனால் அவரின் ஒளிமண்டலம் மிகக் குறைந்த அளவே அதிகரித்தது.
இதற்கு மாறாக ஆண் ஸாதகரிடம் சிறிதும் எதிர்மறை சக்தி இல்லை. அதனால்தான் அவர் ஆளுமை குறைகளைக் களைதல் மற்றும் அஹம்பாவத்தைக் குறைத்தல் ஆகிய செயல்முறைகளில் பெண் ஸாதகரைக் காட்டிலும் குறைவாக முயன்றாலும் இந்த ஸாதனையின் பூரண பலன் அவருக்கு கிடைத்தது. இக்காரணத்தால் அவரின் ஒளிமண்டலம் பெண் ஸாதகருடன் ஒப்பிடும்போது சிறிது அதிக அளவு அதிகரித்துள்ளது.

3 ஈ. ஸாதனை செய்வதற்குரிய ஸாதகமான
சூழ்நிலை அமைவதும் பூர்வ கர்மாக்களை சார்ந்துள்ளது;
ஆனால் ஸாதனைக்கான முயற்சியில் தன்
முழு விருப்பத்தையும் காண்பிப்பது அவசியமாகிறது

எந்த ஒரு ஆண் அல்லது பெண் ஸாதகருக்கும் அவர் ஸாதனை செய்வதற்கேற்ற சாதகமான சூழல் அமைவது அவரின் பூர்வ கர்மாக்களைப் பொருத்தது; இருந்தாலும் ஸாதனையில் கூறப்பட்டுள்ள விஷயங்களுக்கேற்ப முயற்சிப்பது, அதையும் தொடர்ந்து இடைவிடாது செய்வது, உயர்நிலை ஸாதகர்களிடம் வழிகாட்டுதல் பெற்று அதன்படி தீவிர ஆர்வத்துடன் முயற்சித்தல், இதற்கெல்லாம் அந்த ஆண் அல்லது பெண் ஸாதகர் தன்னிச்சையான செயல்களை (க்ரியமாண்) இதற்கு உபயோகிப்பது அவசியமாகிறது. இந்த பரிசோதனையில் பங்கெடுத்த பெண் ஸாதகர் செயல்முறையில் ஈடுபடும்போது எந்த அளவு ஸாதனைக்கான முயற்சியில் ஈடுபட்டாரோ அந்த அளவு பிறகும் தொடர்ந்து செய்தால் அவரின் எதிர்மறையான அதிர்வலைகள் பூரணமாக நஷ்டமடையும் வாய்ப்புள்ளது. அவரின் நேர்மறை சக்தி அதிகமாகி அதன் நல்ல பரிணாமம் அவர் மீது மட்டுமல்லாமல் அவரை சுற்றியுள்ள சூழலுக்கும் ஏற்படுகிறது. ஆண் ஸாதகரிடம் எதிர்மறையான அதிர்வலைகள் சிறிதும் இல்லாத காரணத்தால் அவர் அந்த பெண் ஸாதகரைப் போன்று தீவிர முயற்சி செய்தால் ஸாதனை கண்ணோட்டத்தில் அவருக்கு விரைவில் பயன் ஏற்படும்.
திருமதி மதுரா தனஞ்ஜய் கர்வே, மஹரிஷி ஆன்மீக பல்கலைகழகம், கோவா. (8.1.2018)

இணையதளம் : [email protected]

தகவல் : ஸனாதன் வெளியிடப் போகும் நூல் ‘பல்வேறு மனிதர்களின் ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தின் ஆய்வு’

Leave a Comment