ஹிந்துக்களே, ஆங்கிலேயரின் எச்சிலை விழுங்குவதற்கு பதிலாக உன்னத ஹிந்து கலாச்சாரத்தை ஆதர்சமாகக் கொண்டு அதை பின்பற்றுங்கள்!

ஹிந்துக்களே, ஆங்கிலேயரின் எச்சிலை விழுங்குவதற்கு
பதிலாக (பல்வேறு ‘டே’க்களை கொண்டாடுவதற்கு பதிலாக)
உன்னத ஹிந்து கலாச்சாரத்தை ஆதர்சமாகக் கொண்டு அதை பின்பற்றுங்கள் !

ஹிந்துக்களே, நம் முன்னோர்கள் பொங்கல், திருவாதிரை, சித்திரை மாத புதுவருடப் பிறப்பு, விநாயக சதுர்த்தி, தீபாவளி ஆகிய பண்டிகைகளை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்று காண்பித்துள்ளார்கள்; ஆனால் நாமோ 1-ம் ஜனவரியில் புதுவருடம், வாலண்டைன் டே, மதர்ஸ் டே, ஃபிரெண்ட்ஷிப் டே போன்ற பல வேண்டாத ‘டே’க்களை கொண்டாட ஆரம்பித்துள்ளோம். இந்த ‘டே’க்கள், ஆசைகள், காம இச்சைகள், வக்ர சிந்தனை, ஒழுக்கமின்மை போன்ற அநேக சீர்கேடுகளைத் தூண்டுகின்றன. இவற்றால் கிடைக்கும் சுகங்கள் க்ஷண நேரத்திற்கே. இது போன்ற அதர்ம வழியில் நடப்பதால் நம் பாரம்பரியம் நஷ்டமடைகிறது, அனாவசிய சர்ச்சைகள் மூள்கின்றன, காம இச்சைகள் அதிகமாகின்றன மற்றும் பல ஒழுங்கீனங்களுக்கு அவை வித்திடுகின்றன.

இளம் ஆண்களும் பெண்களும் ஒன்று சேர்ந்து ’14 பிப்ரவரி’ தினத்தை காதலர் தினமாகக் கொண்டாடுகின்றனர். இத்தினத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் பரிசுப் பொருளை, மலர்க்கொத்தைக் கொடுத்து ‘பார்ட்டி’ கொண்டாடி தங்களின் காதலை வெளிப்படுத்துகின்றனர்.

 

1. பெற்றோர்களின் யோக்ய-அயோக்ய
வழிமுறையை பின்பற்றும் குழந்தைகள் !

நீங்கள் 26 வயதில் காதலர் தினத்தை கொண்டாடினால் உங்களின் குழந்தைகள் 16 வயதிலேயே கொண்டாடுவர். உங்களிடம் ஒழுக்கமின்மை 40 சதவிகிதம் இருந்தால் உங்கள் குழந்தைகளிடம் அது 70 சதவிகிதமாக வளரும். கவனத்தில் கொள்ளுங்கள், உங்கள் குழந்தைகள் உங்களைக் காட்டிலும் எல்லா விஷயங்களிலும் முன்னே செல்கிறார்கள். ‘தாய்ப்புலி எட்டடி பாய்ந்தால் குட்டிப்புலி பதினாறு அடி பாயும்’ என்பது பழமொழி. நீங்கள் தர்மவழி நடந்தால் உங்களின் குழந்தைகள் உங்களைக் காட்டிலும் பலமடங்கு தர்மவழியை பின்பற்றுவதில் அக்கறை செலுத்துவர். நீங்கள் ஒழுங்கில்லாமல் இருந்தால் வருங்கால சந்ததியினர் அதையே தங்களின் வாழ்க்கைமுறையாகக் கொள்வர்.

 

2. ஹிந்துக்களே, போராட்ட வீரர்கள் தேசத்திற்காக
செய்துள்ள தியாகத்தை நினைவில் இருத்துங்கள் !

2 அ. போராட்ட வீரர்கள் நாட்டின்
சுதந்திரத்திற்காக தங்களின் உயிரையே பணயம் வைத்தனர்

ஹிந்துக்களே, நம் போராட்ட வீரர்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக சொல்லொணாத கஷ்டங்களை அனுபவித்துள்ளனர். அவர்கள் தேசத்திற்காக தூக்குமேடை ஏறினர், சொந்த பந்தங்களை, வீடு வாசலைத் துறந்தனர், சிறு சிறு குழந்தைகளும் தெருவில் இறங்கி போராடினார்கள். சுதந்திரம் என்ற பெயரில் ஒழுங்கீனமாக நாம் நடந்து கொள்வதற்காகவா அவர்கள் இது போன்ற மகத்தான தியாகங்களை செய்தனர்?

ஆங்கிலேயர், தேசத்தின் கலாச்சாரத்தை, ஒழுக்கத்தை குலைக்க முயன்றபோது போராட்ட வீரர்கள் அதை எதிர்த்து போராடுவதற்காக வீதியில் இறங்கினர். பல போராட்ட வீரர்கள் தங்களின் இன்னுயிரை ஆஹுதியாக்கிய பின்னர்தான் பாரதத்திற்கு சுதந்திரம் கிடைத்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

2 ஆ. பாரதீய கலாச்சாரம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக நம் முன்னோர்கள் பண்டிகைகளைக்
கொண்டாடினர்; அதில் ஆங்கிலேயர் தலையிட்டு குலைக்க
முற்பட்டதால் போராட்ட வீரர்கள் ஒருங்கிணைந்து எதிர்த்தனர்

போராட்ட வீரர்கள் பாரதத்தை விடுவிக்க வேண்டும் என்ற சிறப்பு லட்சியத்தைக் கொண்டிருந்தனர். நாம் நம் தேசத்தில் புராதன காலத்திலிருந்து எந்த பண்டிகைகளை கொண்டாடினோமோ அவற்றை அதே வழிமுறையிலேயேதான் கொண்டாட வேண்டும். பண்டிகையின்போது குடும்பத்தின் எல்லா அங்கத்தினர்களும் ஒன்று கூடியபின் தேசம் மற்றும் தர்மத்தைப் பற்றி அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அதன் மூலம் தேசபக்தியும் மூண்டெழுந்தது, குடும்பத்தினரிடையே நெருக்க உணர்வும் ஏற்பட்டது. போராட்ட வீரர்களுக்கு உலகத்திலேயே மிக உன்னத கலாச்சாரம் நம்முடையது என்பது தெரியும். அந்த கலாச்சாரத்தை பேணி பாதுகாப்பதற்காக பல்வேறு பண்டிகைகள் தார்மீக வழிமுறையில் கொண்டாடப்பட்டன. பிரிட்டிஷ்காரர்கள் இதில் தடங்கல்களை ஏற்படுத்த முயன்றபோது போராட்ட வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அதை எதிர்த்து போராட முற்பட்டனர்.

 

3. பாரதீய கலாச்சாரம், போராட்ட
வீரர்களின் தியாகம் அத்துடன் தாய்-தந்தை
சீராட்டி பாராட்டி வளர்த்த விதம் ஆகியவற்றை
மறந்து காதலர் தினத்தை கொண்டாடுவது
என்பது வெறி பிடித்த நாயைக் காட்டிலும்
மோசமான நடத்தையை வெளிப்படுத்துவது ஆகும் !

ஹிந்துக்களே, காதலர் தினம் எந்தவிதமான கலாச்சாரத்தை மனதில் பதிய வைக்கிறது? அதன் மூலம் நாம் யாரை நம் ஆதர்சமாகக் கொள்கிறோம்? இதன் பதில் உங்களிடம் உள்ளது; ஆனால் அதை வெளிப்படுத்துவதற்கு உங்களுக்கு வெட்கமாக உள்ளது. காதலர் தினத்தன்று ‘ஒருவருக்கொருவரை விட்டால் வேறு யாரும் கிடையாது, மற்றவரே எல்லாம், அவருக்காகவே இப்பிறப்பு’, என்ற மூட பிரமையில் மூழ்கிய காதலர்களே  சந்திக்கின்றனர். தெய்வம் உங்களை எதற்காக படைத்துள்ளது? பாரத கலாச்சாரம், போராட்ட வீரர்களின் உன்னத தியாகம், தாய்-தந்தையின் வளர்ப்பு ஆகிய அனைத்தையும் மறந்து நீங்கள் காதலர் தினத்தை கொண்டாடுகின்றீர்கள். ‘வெறிநாய் கூட தன் எஜமானனை ஒன்றும் செய்யாது’ என்று கூறுவர்; ஆனால் இங்கு மனிதர்கள் வெறிநாயைக் காட்டிலும் கீழ்த்தரமாக நடந்து கொள்கின்றனர்.

 

4. வெட்கங்கெட்ட நிலையின்
எல்லைக்கே சென்றுள்ள ஹிந்துக்கள்!

14 பிப்ரவரி அன்று ஹிந்து காதலர்கள் தாய்-தந்தையை மறந்து அவர்களின் மனதிற்கு விரோதமாக செயல்படுகின்றனர். அந்த சில க்ஷண நேர சுகத்திற்காக தங்களின் உயிரையும் மாய்த்துக் கொள்ள துணிகின்றனர். காதலர் தினம் ஆதர்சத்தை கொடுக்க வல்லதா? இந்தக் கேள்விக்கு வெட்கங்கெட்டவர்கள் ‘ஆம்’ என பதிலுரைப்பர். மூட ஹிந்து காதலர்களே, ஒழுங்கீனத்தை நிறுத்த வேண்டுமென்றால் 14 பிப்ரவரி தினத்தை கொண்டாடுவதை விட்டு விடுங்கள்; அவ்வாறு கொண்டாடுபவர்களையும் திருத்துங்கள், அப்பொழுதே உங்களின் வாழ்வு அர்த்தமுள்ளதாகும்.

Leave a Comment