தனித்துவமான ஆன்மீக சொற்கள் (பகுதி 1)

தொகுப்பாளர்களின் அறிவியல் கண்ணோட்டம்

இந்த இணையதளத்தின் உள்ளடக்கம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 51A-வில் உள்ளபடி, ஒவ்வொரு குடிமகனின் அடிப்படையான அரசியலமைப்பு கடமைகளில் ஒன்றான ‘அறிவியல் மனோபாவத்தை’ தடுக்கும் நோக்கமின்றி வெளியிடப்பட்டுள்ளது. அதேசமயம், அரசியலமைப்பின் 25-வது பிரிவு ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ‘மனசாட்சியின் சுதந்திரம் மற்றும் சுதந்திரமான தொழில், நடைமுறை மற்றும் மதத்தை பரப்புவதற்கு’ உரிமை அளிக்கிறது. இந்திய நீதிமன்றங்களின் பல தீர்ப்புகள் மிகத் தெளிவாக கூறுவது இதுதான், ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கை அல்லது நடைமுறை நமது காரணத்துடன் உணர்வுடன் ஒத்துப் போகிறதா என்பது கேள்வியல்ல, மாறாக அந்த நம்பிக்கை உண்மையாகவும் மனசாட்சிப்படியும் மதத்தின் தொழில் அல்லது நடைமுறையின் ஒரு பகுதியாகவும் நடத்தப்படுகிறதா என்பதுதான் கேள்வி. தனிப்பட்ட கருத்துக்கள் மற்றும் எதிர்வினைகள் பொருத்தமற்றவை. பொது ஒழுங்கு, ஒழுக்கம் மற்றும் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் மட்டுமே தலையீடு அனுமதிக்கப்படும். இந்த வலைத்தளத்தின் உள்ளடக்கங்கள் இந்த மூன்று அம்சங்களில் எதற்கும் ஆபத்தை ஏற்படுத்தாது, அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், விசாரணை மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்ப்பதற்கான அரசியலமைப்பு உரிமைக்குள் உள்ளன.

ஒரு தனிமனிதன் தர்மத்தை நம்பிக்கையுடன் கடைபிடிக்கும்போது, ​​அவன் தர்மம் தொடர்பான பல்வேறு அனுபவங்களைப் பெறுகிறான் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.

மதமும் நம்பிக்கையும் தனிப்பட்ட விஷயங்கள் என்பதால், இந்த இணையதளத்தில் உள்ள கட்டுரைகளில் விவரிக்கப்பட்டுள்ளவை தனிப்பட்ட அனுபவங்களாகும். எனவே, அவை அனைவருக்கும் பொருந்தக்கூடியவையாகவோ அல்லது அனுபவிக்க கூடியதாகவோ இருக்காது. இந்த இணையதளத்தில் உள்ள கட்டுரைகள் சமூகத்தில் குருட்டு நம்பிக்கையை பரப்புவதற்காகவோ, மருத்துவ சிகிச்சையை எதிர்ப்பதற்காகவோ அல்லது அறிவியல் மனப்பான்மையை எதிர்ப்பதற்காகவோ எழுதப்படவில்லை. இந்தக் கட்டுரைகளை வாசகர்கள் கவனமாகப் படிக்க வேண்டும். – தொகுப்பாளர்

ஆன்மீக உணர்வு உள்ள இடத்தில் கடவுள் இருக்கிறார் என்ற தத்துவத்தின் அடிப்படையில் ஸாதகர்களின் தனிப்பட்ட ஆன்மீக அனுபவங்கள் இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியான அனுபவங்கள் கிடைக்கும்  என்று சொல்ல முடியாது. – தொகுப்பாளர்

இந்த இணையதள கட்டுரைகளில் உள்ள சில ஆன்மீக சொற்களின் பொருள்

ஆன்மீக நிவாரணங்கள்

ஒருவருக்கு எண்ணற்ற எண்ணங்கள் தோன்றும்போது, கவனம் செலுத்த முடியாமல் போகும்போது, மனநலம் சரியில்லாமல் இருக்கும்போது அல்லது அமைதியின்மை ஏற்படும்போது, அவர் மனம் ஸ்திரமாக அல்லது மகிழ்ச்சியாக மாற கடவுளின் நாமத்தை ஜபித்தல், தியானம் செய்தல், பிராணாயாமம், மந்திரங்கள் ஓதுதல், பிரார்த்தனை செய்தல் போன்ற சில ஆன்மீகச் செயல்களைச் செய்யலாம். இவை ‘ஆன்மீக நிவாரணங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

இந்த இணையதளத்தில் உள்ள கட்டுரைகளில் உள்ள சதவிகித மொழி

ஆன்மீகத்தை அறிவியல் மொழியில் புரிந்து கொள்ள வேண்டும் என்ற கண்ணோட்டத்தில், சர்வதேச புகழ்பெற்ற உளவியலாளர் பரம் பூஜ்ய  டாக்டர் ஜெயந்த் ஆடவலே அவர்கள் (தொகுப்பாளர்), இந்த கட்டுரைகளில் உள்ள சில அம்சங்களின் பல்வேறு கூறுகளின் விகிதத்தை சதவிகித மொழியில் வழங்கியுள்ளார். எடுத்துக்காட்டாக, லேசான, மிதமான மற்றும் கடுமையான என்பவை முறையே 1-30%, 31-60% மற்றும் 61-100% என அழைக்கப்படுகின்றன

ஸாதகர்களுக்கு கிடைக்கும் தெய்வீக ஞானம் என்பது அவர்களின் ஆன்மீக திறன் விழிப்படைந்ததால் கிடைத்த ஆன்மீக அனுபவமாகும்

சில ஸனாதன் ஸன்ஸ்தாவின் ஸாதகர்கள், பல ஆண்டுகளாக ஸாதனை செய்து வருவதால், அவர்களின் ஆன்மீகத் திறன் விழிப்படைந்து, பல்வேறு அம்சங்களில் ஞானம் பெறும் ஆன்மீக அனுபவத்தைப் பெறுகிறார்கள்.  அதன் பின்னணியில் உள்ள வேதபூர்வமான ஆதாரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ततः प्रातिभश्रावणवेदनादर्शास्वादवार्ता जायन्ते ।

தத: ப்ராதிபச்ராவணவேதநாதர்சாஸ்வாதவார்த்தா ஜாயந்தே – பதஞ்சலியோகதர்ஷன், பகுதி 3, சூத்ரம் 36.

பொருள் : யோக சக்தியால் ஆத்மாவைக் கட்டுப்படுத்துவதன் மூலம்  அமானுஷ்ய சக்திகளான சூட்சுமமான, கண்ணுக்குத் தெரியாத அல்லது தொலைதூர பொருட்களைப் பார்ப்பது (சூட்சும பார்வையைப் பெறுதல்), தெய்வீக ஒலிகளைக் கேட்பது, தெய்வீக ஸ்பரிசத்தை அனுபவிப்பது, தெய்வீக வடிவங்களை தரிசிப்பது, தெய்வீக அமிர்தத்தின் இனிமையை ருசிப்பது மற்றும் தெய்வீக வாசனையை நுகர்வது சாத்தியமாகின்றன.

பகுப்பாய்வு : மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி, ஸனாதன் ஸன்ஸ்தாவின் சில ஸாதகர்களுக்கு ஆன்மீகத் திறன் விழிப்படைந்துள்ளது. அதனால்  அவர்கள், திவ்ய ஞானத்தைப் பெறுவது, தெய்வீக ஒலிகளைக் கேட்பது, சூட்சும வடிவங்களைப் பார்ப்பது போன்ற பல்வேறு ஆன்மீக அனுபவங்களைப் பெறுகிறார்கள்

புனித கிரந்தங்களின் ஆதாரப்படி ஸாதகர்களுக்கு திவ்ய ஞானம் கிடைக்கிறது என்பதும் யோகாப்யாசத்தால் அவர்களின் சூட்சும திருஷ்டி விழிப்படைந்துள்ளது என்பதும் நிரூபணமாகியுள்ளது.

ஞானம் பெரும் ஸாதகர்களின் அடக்ககுணம்

இச்சூழலில், சம்பந்தப்பட்ட ஸாதகர்களுக்கு, ‘இது என்னுடைய ஞானம்  இல்லை, உண்மையிலேயே தெய்வீக ஞானம்’ என்ற ஆன்மீக உணர்வு மேலோங்கி இருப்பதால் அஹம்பாவம் அதிகரிப்பதில்லை. மேலும் கட்டுரையின் முடிவில் தங்கள் சொந்தப் பெயர்களை எழுதுவதற்குப் பதிலாக, தங்களின் நம்பிக்கைக்குரிய இடத்தை குறிப்பிட்டு பின்பு அடைப்புக்குறிக்குள் அவர்கள் மூலமாக என்று எழுதுகிறார்கள்; உதாரணத்திற்கு – சூட்சும  உலகின்  ‘ஒரு வித்வான்’ (திருமதி அஞ்ஜலி காட்கில் மூலமாக)’.

திருமதி அஞ்ஜலி காட்கில், சூட்சும உலகத்தைச் சேர்ந்த ‘ஒரு வித்வான்’ தனக்கு ஆன்மீக அறிவை வழங்குகிறார் என்ற தெய்வீக உணர்வைக்   கொண்டுள்ளார்.

சில விஷயங்களை எழுதும்போது கஷ்டங்கள் ஏற்பட்டால் அதன் முடிவில் தங்கள் பெயரை எழுதுவதற்கு பதிலாக  ‘ஒரு மாந்த்ரீகன்‘ என்று எழுதி அடைப்புக்குறிக்குள் தங்களை ஊடகங்கள் என்று எழுதுகிறார்கள்.

 

Leave a Comment