ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமம் சர்வ சாதாரண மக்களிடமும் எவ்வாறு போய் சேர்ந்தது? இது சம்பந்தமான சுவாரஸ்யமான தகவல்!

முன்பு 1940-50 காலக்கட்டத்தில் யாரோ ஒருவர் காஞ்சி மகாபெரியவாளான ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளை பேட்டி கண்டார். அவர் இந்த பேட்டியைப் பதிவு செய்ய ‘டேப் ரெகார்டரை’ உபயோகித்தார். அப்போது மகாபெரியவா, ‘யாருக்காகவாவது எல்லாவற்றிற்கும் முதன்மையான டேப்ரெகார்டிங் விஷயம் சம்பந்தமாக ஏதாவது தெரியுமா?’ என்று ஒரு கேள்வி கேட்டார். மேலும் அவர் இரண்டாவது கேள்வியையும் கேட்டார், ‘ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் நமக்கு எவ்வாறு கிடைத்துள்ளது?’ அங்கு கூடியிருந்தவர்களில் ஒருவர் ‘பிதாமகர் பீஷ்மரால் நமக்கு கிடைத்துள்ளது’ என்று கூற அனைவரும் அதை ஆமோதித்தனர்.

1.    மகாபாரத யுத்தபூமியில் பிதாமகர் பீஷ்மர் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைக் கூறுதல்; ஆனால் அதை யாரும் பதிவு செய்யவில்லையே என்று யுதிஷ்டிரர் வருத்தம் தெரிவித்தல்

அதன் பிறகு மகாபெரியவா மீண்டும் ஒரு கேள்வி எழுப்பினார், ‘யுத்தபூமியில் அனைவரும் பீஷ்மர் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் கூறுவதைக் கேட்டனர், அப்போது அவர்களில் யாராவது அதை பதிவு செய்தார்களா?’ அதற்கு பதில் தெரியாததால் அங்கு அமைதி நிலவியது. அப்போது மகாபெரியவா தெளிவுபடுத்தினார், எப்போது பீஷ்மர் கிருஷ்ணஸ்துதியாக ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமத்தைக் கூறினாரோ, அப்போது பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மகரிஷி வியாசர் ஆகியோருடன் கூட அனைவரும் பீஷ்மரைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர் ஆயிரம் நாமாக்களைக் கூறி முடிக்கும்வரையில் ஆச்சர்யம் மிகுந்தவர்களாக அவரையே கண் கொட்டாமல் பார்த்தபடி இருந்தனர். முதலில் நினைவுலகிற்கு வந்த யுதிஷ்டிரர் தன் கருத்தைக் கூறினார், ‘பிதாமஹர், வாசுதேவன் மீது இப்பேர்பட்ட உன்னதமான மனதை ரமிக்கச் செய்யும்படியான ஆயிரம் நாமாக்களைக் கூறினார், நாம் அனைவரும் அதை வெறும் செவிமடுத்தோம்; யாரும் அதை பதிவு செய்யவில்லை, அதனால் அதன் வரிசைக்ரமத்தை நாம் தொலைத்தவர்கள் ஆகிவிட்டோமே’. அப்போது அனைவரும் ஸ்ரீகிருஷ்ணனை பெரும் ஆதூரத்துடன் உதவி செய்ய வேண்டிக் கொண்டனர். பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கூறினார், ‘உங்கள் அனைவரைப் போல எனக்கும் இப்போது கேட்ட விஷயம் மிகவும் பிடித்தமானதாக உள்ளது; ஆனால் நாம் என்ன செய்ய முடியும்?’

2.    சஹதேவன் சிவ உபாசனை செய்து
சுத்தஸ்படிகத்தின் மூலம் ஒலி அதிர்வலைகளை
வெளிப்படுத்தி விஷ்ணுஸஹஸ்ரநாமத்தைப் பெறுதல்
மற்றும் மகரிஷி வியாசர் அதை பதிவு செய்தல்

வாசுதேவன் கூறினார், ‘சஹதேவனால் மட்டுமே இதை மீண்டும் பெற முடியும் மற்றும் வியாசர் அதை பதிவு செய்து கொள்வார்’. சகதேவனால் இக்காரியத்தை எவ்வாறு செய்ய முடியும் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோருக்கும் ஏற்பட்டது. அப்போது ஸ்ரீகிருஷ்ணர் பதிலுரைத்தார், ‘உங்கள் அனைவர்களிடையே சகதேவனே சுத்தஸ்படிகத்தை அணிந்துள்ளான். அவன் சிவனை பிரார்த்தித்து தியானம் செய்தால் அந்த ஸ்படிகம் ஒலி அதிர்வலைகளை வெளியிடும், அதை மகரிஷி வியாசர் பதிவு செய்து கொள்வார்’. அப்போது சகதேவனும் வியாசரும் எங்கு பீஷ்மர் அவர்களுக்கு விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைக் கூறினாரோ அந்த இடத்தில் அமர்ந்து கொண்டனர். சகதேவன் ஸ்படிகம் மூலமாக ஒலி அதிர்வலைகளை வெளிப்படுத்தி விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை பெறுவதற்காக சிவனை தியானம் செய்து பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தான். அமைதியான சூழலில் ஒலி அதிர்வலைகளை க்ரஹித்துக் கொள்ளும் இயல்பு இயற்கையாகவே ஸ்படிகத்திடம் உள்ளது. சிவனை சரியானபடி தியானம் செய்வதால் இந்த ஒலி அதிர்வலைகளை மீண்டும் பெற முடியும்.

3.    கணினியின் ‘ஹார்ட் டிஸ்க்’கிலும் கைபேசியின்
‘மெமரி கார்ட்’டிலும் ஸ்படிகம் உபயோகப்படுத்தப்படுதல்

இதுபோன்று உலகின் முதல் டேப் ரேகார்டரான ஸ்படிகம் மூலமாக விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை வியாச பகவான் பதிவு செய்து இன்றுவரை நமக்கு அது தொடர்ந்து கிடைத்து வருகிறது. மகாபெரியவா இதை விளக்கும்போது அதைக் கேட்டு அனைவரும் ஸ்தம்பித்து போனார்கள். இன்று நாம் பயன்படுத்தும் கணினியின் ‘ஹார்ட் டிஸ்க்’கிலும் கைபேசியின் ‘மெமரி கார்ட்’டிலும் ஸ்படிகம் உபயோகப்படுத்தப்படுகிறது. Quartz stone அல்லது  SiO2 அல்லது  silicon என்பவை ஸ்படிகத்தையே குறிக்கின்றன.

(தகவல் : சமூகத்தின் மூலம்)

Leave a Comment