வெள்ள நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் வீட்டிற்குச் செல்வதற்கு முன்னும் பின்னும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முக்கியமான தகவல்கள்

அதிகப்படியான மழை காரணமாக சில மாவட்டங்கள் வெள்ளத்தை எதிர்கொள்கின்றன. ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகள் வெள்ள நீரில் மூழ்கி அவர்களின் வழக்கமான வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இப்போது வெள்ள நீர் குறைந்து வருவதால், இந்த மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புகின்றனர்.

வீடு திரும்புவதற்கு முன் இந்த மக்கள் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? வீடுகளில் கிருமி நீக்கம் செய்வது எப்படி? ஆரோக்கியத்தை எவ்வாறு கவனித்துக் கொள்வது? இந்த கேள்விகள் தொடர்பான முக்கிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. வீட்டிற்குச் செல்வதற்கு முன் முதலில் செய்ய வேண்டியவை

அ. உங்கள் இடம் அல்லது கிராமம் மீண்டும் வசிப்பதற்கு பாதுகாப்பானது என அரசாங்க நிர்வாகம் அறிவித்த பின்னரே வீட்டிற்குச் செல்லுங்கள்.

ஆ. வீடு, மண் வீடு என்றால், அங்கு திரும்பிச் செல்வது பாதுகாப்பானதா என்பதை கட்டுமான நிபுணர்களிடமிருந்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இ. கட்டிடங்களில் அல்லது உங்கள் அருகிலுள்ள உடைந்த மின்சார கம்பிகளைத் தொடாதீர்கள்.

2. வீட்டிற்குச் சென்றபின் செய்ய வேண்டிய நடவடிக்கைகள்

அ. வீடுகள் மற்றும் பிற பொருள்களைப் பொறுத்தவரை
சேதங்களின் காப்பீடு குறித்த விஷயங்கள்

1. வீட்டின் பழுது பார்க்கும் பணியைச் செய்வதற்கு முன் மற்றும் வீட்டிலுள்ள பொருட்களை சுத்தம் செய்வதற்கு முன், சேதமடைந்த வீட்டின், பொருட்களின் புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள். காப்பீட்டுத் தொகை அல்லது அரசாங்க உதவியைப் பெற அவை பயனுள்ளதாக இருக்கும்.

2. காப்பீடு பிரதிநிதியின் வழிகாட்டுதலை எடுத்துக் கொள்ளுங்கள். வாகனங்கள், மின்சார உபகரணங்கள் மற்றும் வீட்டிலுள்ள பிற புதிய பொருட்களுக்கு காப்பீட்டுக் கொள்கையின் கீழ் காப்பீடு செய்யப்பட்டிருந்தால் காப்பீட்டுத் தொகையைப் பெற முடியும். மேலும் நீர் மற்றும் இயற்கை பேரழிவுகள் காரணமாக ஏற்படும் சேதங்களுக்கும் காப்பீடு செய்யப்பட்டிருந்தால் காப்பீட்டுத் தொகையைப் பெற முடியும்.

ஆ. மின்சாரம் மற்றும் மின்சார உபகரணங்கள்
தொடர்பாக என்ன செய்ய வேண்டும்?

1. வீட்டின் சுவர்கள், மின்சார உபகரணங்கள் (மின்விசிறிகள், துணி துவைக்கும் இயந்திரங்கள், மிக்ஸி) மற்றும் சுவிட்ச் போர்டுகள் ஈரமாக இருந்தால் மின்சாரத்தை இயக்குவது மிகவும் ஆபத்தானது. இதன் காரணமாக மின்சார அதிர்ச்சியால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. வீடு காய்ந்ததும், எலக்ட்ரீஷியன் மின்சார இணைப்புகளைச் சரிபார்த்த பின்னரே மின்சக்தியை இயக்கவும்.

2. கைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் ஈரமாகிவிட்டால், அவை அணைக்கப்பட்டிருந்தால், அவற்றின் பேட்டரிகளை அகற்றி ஒதுக்கி வைக்கவும்.

3. கருவிகள் மற்றும் உபகரணங்கள் ஈரமாகிவிட்டது என்பதால் மட்டுமே அவற்றை குப்பையில் எறிய வேண்டாம். அவற்றை சரி செய்ய முடியுமா என்பதை குறிப்பிட்ட நிபுணர்களிடம் கேட்டு சரி பார்க்கவும்.

இ. வீட்டை சுத்தம் செய்தல் மற்றும் கிருமி நீக்கம் செய்தல்

1. நீர் நீண்ட காலமாக தேங்கி நின்றால், அது பாக்டீரியா, நோய்க்கிருமிகள் மற்றும் பிற உயிரினங்களால் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. சோப்பு மற்றும் சுத்தமான தண்ணீரில் அல்லது லைசால் போன்ற கிருமிநாசினியைக் கொண்டு தரையையும் துடைக்கவும், பின்னர் அதை சுத்தம் செய்து உலர வைக்கவும்.

2. வேப்ப இலைகள் மற்றும் கற்பூரத்தின் ‘தூபத்தை’ வீட்டின் அனைத்து அறைகளிலும் காட்டவும். இது சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தவும், வீட்டை கிருமி நீக்கம் செய்யவும் உதவும்.

3. வீட்டின் கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்து வைக்கவும். இது காற்றோட்டத்திற்கு உதவும் மற்றும் ஈரமான சுவர்களை உலர்த்தவும் உதவும்.

ஈ. வீட்டிலுள்ள பொருள்கள் மற்றும் உபகரணங்களை இடம்
மாற்றுவதற்கு முன் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்

1. எரிவாயு சிலிண்டரிலிருந்து வாயு கசிவு இருந்தால், மின்சாரத்தின் பிரதான பொத்தானை அணைக்கவும். சிலிண்டரை திறந்த வெளியில் காற்றுபடும்படி வைத்திருங்கள். உதாரணமாக, மொட்டை மாடியில். எரிவாயு சிலிண்டரின் வாசனை வீட்டில் பரவியிருந்தால், மின்சார பொத்தான்களை போடாமல் வீட்டின் கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்து வைக்கவும்.

2. வெள்ள நீர் காரணமாக பாம்புகள், தேள் மற்றும் எலிகள் போன்ற ஊர்வன மற்றும் விலங்குகள் வீட்டிற்குள் நுழையும் வாய்ப்பு உள்ளது. இருண்ட மற்றும் குப்பை பகுதிகளில் உள்ள பொருட்களை கவனமாக அகற்றவும். பாம்புகள், தேள் போன்றவற்றை வீட்டிலிருந்து அகற்ற, ‘பிராணி மித்ரா’ (விலங்குகளின் நண்பர்கள்) போன்ற அமைப்புகளின் உதவியை நாடுங்கள்.

3. வீட்டிலுள்ள சேற்றை சுத்தம் செய்யும்போதும், அதில் உள்ள பொருட்களையும் உபகரணங்களையும் நகர்த்தும்போதும், அடர்த்தியான பூட்ஸ் மற்றும் பொருத்தமான கையுறைகளை அணியுங்கள். கூர்மையான பொருள்கள் (கத்தரிக்கோல், கத்தி) அதில் இருந்தால் அதனால்  காயமடைவதை தடுக்க முடியும்.

4. வெள்ள நீரில் மூழ்கிய பொருட்களை (உதா.  மரச்சாமான்கள், உடைகள், பாத்திரங்கள் போன்றவை) மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பு கழுவி, சுத்தம் செய்து உலர வைக்க வேண்டும். அலமாரிகள், கட்டில்கள், இருக்கை போன்ற இரும்புப் பொருட்கள் துருப்பிடிக்காமல் இருக்க சுத்தமாக துடைத்து, பின் உலர்ந்த துணியால் துடைத்து  உலர வைக்க வேண்டும். வீட்டை வெள்ளை அடிக்கும் முடிவை பின்னர் கோடைகாலத்தில் எடுக்கலாம்.

உ. உணவு மற்றும் நீர் தொடர்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்

1. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் கிணறு இருந்தால், அதிலிருந்து தண்ணீரை உட்கொள்ள வேண்டாம், ஏனெனில் தொற்று ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.

2. வீட்டில் தேங்கி நிற்கும் அல்லது சேமிக்கப்பட்ட தண்ணீரை உட்கொள்ளவோ பயன்படுத்தவோ கூடாது.

3. குடிநீரை சேமிக்க பயன்படும் பாத்திரங்களை நன்கு சுத்தம் செய்து சோப்பு மற்றும் சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். பின்னர் உலர்ந்த துணியால் அவற்றை சுத்தமாக துடைத்த பின் அவற்றை. தண்ணீர் சேமிக்க பயன்படுத்தவும்.

4. சுத்தமான குடிதண்ணீரை சமைப்பதற்கும், பல் துலக்கவும், வாயைக் கழுவுவதற்கும் பயன்படுத்தவும். குடிநீரை தினமும் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

5. எந்த உணவையும் சாப்பிடுவதற்கு முன் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரில் நன்கு கழுவுங்கள்.

6. வெள்ள நீருடன் தொடர்பு கொண்ட உணவு மற்றும் காய்கறிகளைப் பயன்படுத்த வேண்டாம். குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள், நுகர்வுக்கு பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்திய பின்பே உபயோகப்படுத்தவும்.

3. உங்கள் மற்றும் பிறரின் ஆரோக்கியத்தை
கவனித்துக் கொள்ளுங்கள்!

அ. வெள்ளத்திற்குப் பிறகு சமூகத்தில் தொற்று நோய்கள் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளன. அருந்தத் தகாத நீர் மற்றும் மாசடைந்த நீரை பருகுவதால் ஹெபடைடிஸ், டைபாய்டு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்த்தொற்று சமூகத்தில் பரவலாம்.

ஆ. கொசுக்கள் அதிகரிப்பதால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவக்கூடும். உங்கள் பகுதியில் கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரித்தால் கொசு வலைகள் அல்லது கொசுவத்தி சுருள்கள் மற்றும் தூபக் குச்சிகள் போன்ற கொசு விரட்டிகளைப் பயன்படுத்துங்கள்.

இ. தேங்கி நிற்கும் தண்ணீரில், குழந்தைகளை விளையாட அனுமதிக்காதீர்கள்.

ஈ. வீட்டில் முன்பு சேமித்து வைக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு அலோபதி மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.

இந்த காலகட்டத்தில் ஒவ்வொருவரும் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது முக்கியம். உடல்நலம் தொடர்பாக ஏதேனும் கேள்விகள் இருந்தால், உடனடியாக மருத்துவர்களை அல்லது அரசு மருத்துவமனையை தொடர்பு கொள்ளுங்கள்.

வெள்ள நீர் குறைந்ததும் கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி
வீட்டின் சுத்திகரிப்பை செய்யுங்கள் !

வெள்ள நீர் குறைந்தவுடன் ஸாதகர்கள் முதலில் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு வீட்டின் பிரதான கதவுக்கு வெளியே நின்று வீட்டின் கண் திருஷ்டியை கழித்துவிட்டு, வீட்டின் மற்ற அறைகளின் கண் திருஷ்டியை கழித்து விடுங்கள்.

1. கண் திருஷ்டியை தேங்காய் அல்லது
எலுமிச்சை கொண்டு கழித்து விடுங்கள்

முடிந்தவரை, வீட்டின் கண் திருஷ்டியை தொடர்ந்து 3 நாட்கள் தேங்காயால் கழித்து விடுங்கள். தேங்காயின் முனை பிரதான கதவை நோக்கி இருக்கும் வகையில் தேங்காயை இரு உள்ளங்கைகளிலும் பிடித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு அறையிலும் தேங்காயுடன் அப்ரதக்ஷணமாக (கடிகாரச் சுற்றுக்கு எதிர்திசையில்) சென்று கண் திருஷ்டியை கழித்து விடுங்கள். அதன் பிறகு வீட்டிற்கு வெளியே தேங்காயை உடைக்கலாம் அல்லது தண்ணீரில் விடலாம். தேங்காயால் கண் திருஷ்டியை கழிக்க முடியாவிட்டால், எலுமிச்சை கொண்டு செய்யுங்கள். ஒவ்வொரு அறையின் கதவுக்கு வெளியே நின்று, முதலில் எலுமிச்சையை ப்ரதக்ஷணமாக மூன்று முறை சுற்றவும், பின்னர் மூன்று முறை அப்ரதக்ஷணமாக சுற்றவும், பின்னர் அதனை தண்ணீரில் விடவும். கண் திருஷ்டியை எலுமிச்சையுடன் கழிக்கும்போது, ஒவ்வொரு அறைக்கும் உள்ளே செல்ல வேண்டிய அவசியமில்லை. அந்த குறிப்பிட்ட அறையின் கதவுக்கு வெளியே நின்று அதைச் செய்யலாம்.

2. இதன் பிறகு கோமியத்தை தெளிப்பதன் மூலம் வீட்டை
சுத்திகரிக்கவும், வீட்டைச் சுற்றி ஸாத்வீக ஊதுபத்தியை காட்டவும்.

தகவல் : தினசரி ஸனாதன் பிரபாத்

Leave a Comment