எளிமையான ஆயுர்வேத நிவாரணங்கள்

1.    ஜுரம்

ஜுரத்தால் பாதிக்கப்பட்ட ஸாதகர்கள் இந்த கஷாயத்தை 100 மி.லி. அளவு ஒரு நாளைக்கு 3 வேளைகள் வீதம் 7 நாட்கள் குடிக்க வேண்டும். (காலை 6-10 மணிக்குள், மதியம் 12-2 மணிக்குள், மாலை 6-10 மணிக்குள்) ஒரு நாளைக்கு 3 வேளைகள் வீதம் 25 நபருக்கு தேவையான கஷாயம் தயாரிக்க தேவையான மருத்துவ குணமுள்ள பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1 கிலோ இஞ்சி; 1 ¾ கிலோ வேப்பிலை; 150 கிராம் மிளகு

மேலே குறிப்பிட்ட எல்லாப் பொருட்களையும் நன்கு இடித்து அதனுடன் 15 லிட்டர் நீர் சேர்த்து அது பாதியாகக் குறையும் வரை கொதிக்க வைக்க வேண்டும். கஷாயம் குடிக்கும் சூட்டில் இருக்கும்போது அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்கவும்.

(டீ கெட்டிலில் இந்த கஷாயத்தை ஊற்றி வைக்கவும். ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர் முக்கால் டம்ளர் இந்த கஷாயத்தை குடிக்க வேண்டும். நபர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி மருத்துவ பொருட்களின் அளவும் மாறுபடும்.)

2.    மலச்சிக்கல் (மலம் வெளியேறாமல் இருத்தல்
அல்லது மலம் கழிக்க கஷ்டப்படுதல்)

ஒரு தட்டில் 2 டீஸ்பூன் விளக்கெண்ணெயை எடுத்துக் கொள்ளவும். ஒரு வாழைப்பழத்தை உரித்து அந்தப் பழம் முழுவதிலும் விளக்கெண்ணெய் படுமாறு தோய்த்து பிறகு அதை உண்ணவும். இவ்வாறு உண்டபின் ஒரு டம்ளர் சுடுதண்ணீர் குடிக்கவும். இதை ஒரு நாளைக்கு காலை 6-10 மணிக்கு ஒரு முறையும் மாலை 6-10 மணிக்கு ஒரு முறையும் ஒரு நாளைக்கு இருமுறை உண்ணவும். இவ்வாறு 3 நாட்கள் தொடர்ந்து உண்ணவும்.

–        சித்தாச்சார்யா புண்யமூர்த்தி, தஞ்சாவூர், தமிழ்நாடு. (24.6.2016)

தகவல் : தினசரி ஸனாதன் பிரபாத்

Leave a Comment