ஜகத்குரு ஸ்ரீகிருஷ்ணனின் வாழ்க்கையின் சில சிறப்பான அம்சங்கள்!

 

1. ஸ்ரீகிருஷ்ணனின் குடும்பத்தினர்

அ. ஸ்ரீகிருஷ்ணனின் பிறப்புத் தந்தை வஸுதேவர் ஆவார். அவர்களை ‘யாதவர்கள்’ என அழைப்பது வழக்கம்.

ஆ. வஸுதேவர் ஸ்ரீகிருஷ்ணன் பிறந்தவுடன் அவனை கோகுலத்தில் உள்ள நந்தகோபரிடம் கொண்டு சேர்த்தார் மற்றும் யசோதை பெற்றெடுத்த பெண் குழந்தையை மதுராவிற்கு கூட்டி வந்தார்..

2. ராதா

ஸ்ரீகிருஷ்ணனின் ராதை பற்றி மகாபாரதம், ஹரிவம்சபுராணம், விஷ்ணுபுராணம் மற்றும் பாகவதபுராணம் ஆகியவற்றில் குறிப்பிடவில்லை. பிரம்மவைவர்த்த புராணத்தில் ராதாவே கிருஷ்ணனுக்கு மிகப் பிரியமானவள் என கூறப்பட்டுள்ளது. ராதா கிருஷ்ணனின் பக்தை ஆவாள்.

3. கல்வி மற்றும் ஸாதனை

அ. ஸ்ரீகிருஷ்ணன் முறையான கல்வியை சில மாதங்களிலேயே முடித்தான்.

ஆ. ஸ்ரீகிருஷ்ணனும் பலராமனும் ஸாந்தீபனி ரிஷியிடம் குருகுல கல்வி பயின்றனர்.

4. ஸ்ரீகிருஷ்ணன் நிர்மாணித்த இரு நகரங்கள்

ஸ்ரீகிருஷ்ணன் 2 நகரங்களை நிர்மாணித்தான் – த்வாரகா மற்றும் பாண்டவ புத்திரர்களின் மூலமாக இந்திரப்ரஸ்தம்

5. ஸ்ரீகிருஷ்ணனும் கோபியரும்

‘ஸ்ரீகிருஷ்ணனே எல்லாம்’ என்றுள்ள கோபியரின் ஆன்மீக உணர்வின் வர்ணனை!

அ. ஸ்ரீகிருஷ்ண சைதன்யத்தின் உருவகமாக விளங்கும் கோபியர்கள் : ‘கோபி ஸ்ரீகிருஷ்ண சைதன்யத்தால் நிரம்பியவள் என்றால் சாக்ஷாத் ஸ்ரீகிருஷ்ணன் இறைவனின் பூர்ணஸ்வரூபமான பிரம்ம தத்துவம் ஆகும்.

ஆ. கோபி என்றால் ஸ்ரீகிருஷ்ணனின் மேலுள்ள பக்திரசத்தில் ஊறிய, த்வைதத்தில் உள்ள, நிஜமான ஸகுண சக்தியாகும்.

இ. கோபியின் மனம் இறைவனின் அதி உன்னதமான குணங்களை தன்மயமாக்கி உள்ள நிறைகுடமாகும் : இறைவனுக்கான தாபம், ஏக்கம், நிர்மலம்,தெளிவு, சஹஜ உணர்வு, கவரும் தன்மை, அழகு, ஸமரஸ மனப்பான்மை, இறைவனோடு ஒன்றிய தன்மை, பரந்த மனப்பான்மை ஆகிய குணங்களைத் தன்னுள் கொண்ட கோபியின் மனமே இறைவனின் சகல கல்யாண குணங்களின் இருப்பிடமாகும்.

ஈ. கோபி உணர்வு மற்றும் கிருஷ்ண உணர்வு ஆகிய இரண்டும் ‘எங்கும் நிறையும் தன்மை’ என்ற குணத்தால் இணைக்கப்பட்டுள்ளது. இவ்விரு உணர்வுகளிடையே அத்வைத தத்துவம் மேலோங்கியுள்ளது.

உ. ஸ்ரீகிருஷ்ண தத்துவத்தின் எல்லாவற்றையும் உள்ளடக்கிய அஷ்ட குணங்களின் வெளிப்பாடைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், கோபியின் ஆன்மீக உணர்வைக் கொள்ள வேண்டும். அப்பொழுதே ஸ்ரீகிருஷ்ணனின் மீது அபரிமிதமான அன்பை, ஆழ்ந்த தாபத்தை உண்மையில் அனுபவிக்க இயலும்.

ஊ. ஸ்ரீகிருஷ்ணபக்தியிலுள்ள ப்ரேமரசம் ததும்பிய ஆழ்ந்த தாபமே கோபியரின் ஆன்மீக உணர்வாகும்.’

– ஒரு வித்வான் (ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் அவர்களின் எழுத்துகள் ‘ஒரு வித்வான்’ என்ற பெயரில் வெளிவருகிறது.)

6. ஸ்ரீகிருஷ்ணனின் ஆயுதங்கள்

அ. ஸ்ரீகிருஷ்ணனின் வில்லின் பெயர் ‘சாரங்கம்’ மற்றும் முக்கிய ஆயுதமான சக்கரத்தின் பெயர் ‘சுதர்சன’ சக்கரம் ஆகும். அது உலக அஸ்திரம், திவ்யாஸ்திரம் மற்றும் தேவதாஸ்திரம் என்று மூன்று விதங்களில் செயல்படும் சக்தி படைத்தது. அதை மாற்று கொள்ளும் சக்தி இரு அஸ்திரங்களுக்கே உண்டு – பாசுபதாஸ்திரம் (சிவன், ஸ்ரீகிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனிடத்தில் உள்ளது.) மற்றும் ப்ரஸ்வபாஸ்திரம். (சிவன், வஸுகணம், பீஷ்மர் மற்றும் ஸ்ரீகிருஷ்ணன் ஆகியோரிடத்தில் உள்ளது.)

ஆ. கிருஷ்ணனின் கத்தியின் பெயர் ‘நந்தக்’, கதையின் பெயர் ‘கௌமோதகி’ மற்றும் சங்கின் பெயர் ‘பாஞ்சஜன்யம்’.

7. மிக உன்னத வில்லாளி

‘அர்ஜுனன் மிக உன்னத வில்லாளியாக கருதப்படுகிறான்; ஆனால் உண்மையில் ஸ்ரீகிருஷ்ணனே இந்த வில்வித்தையில் மிகச் சிறந்தவன் மற்றும் அது நிரூபிக்கப்பட்டும் உள்ளது. மத்ர ராஜகுமாரியான லக்ஷ்மணாவின் சுயம்வரத்தில் வைக்கப்பட்ட பரீட்சை திரௌபதி சுயம்வர பரீட்சையைக் காட்டிலும் கடினமானது. அச்சமயத்தில் கர்ணன் மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவருமே தோற்றனர். அப்பொழுது ஸ்ரீகிருஷ்ணன் லக்ஷ்யவேதியாக அம்பை விட்டு லக்ஷ்மணாவின் விருப்பத்தைப் பூர்த்தி செய்தார். லக்ஷ்மணா முன்பே ஸ்ரீகிருஷ்ணனை தன் கணவனாக மனதில் வரித்து விட்டாள்.

8. ஸ்ரீகிருஷ்ணன் செய்த யுத்தங்கள்

ஸ்ரீகிருஷ்ணன் பல போராட்டங்கள் மற்றும் யுத்தங்களை நடத்தினான்; ஆனால் அவற்றில் மூன்று மிக பயங்கரமான யுத்தங்கள் ஆகும் – மகாபாரதம், ஜராசந்தன், காலயவன் ஆகியோரை எதிர்த்து யுத்தம் மற்றும் நரகாசுரனுடனான யுத்தம்

9. ஸ்ரீகிருஷ்ணன் வதம் செய்த ராக்ஷசர்கள்

அ. ஸ்ரீகிருஷ்ணன் 13 வயது இருக்கும்போது உலகபிரசித்த மல்யுத்த வீரர்களான சாணூரன் மற்றும் மல்லனை வதம் செய்தான்.

ஆ. ஸ்ரீகிருஷ்ணன் அஸ்ஸாமில் பாணாசுரனுடன் யுத்தம் செய்தார்.

10. ஸ்ரீகிருஷ்ணனின் இறுதி நாள்

அ. இறுதி வருடத்தை விடுத்து ஸ்ரீகிருஷ்ணன் துவாரகையில் 6 மாதங்களுக்கு மேல் எப்பொழுதும் தங்கியதில்லை.

ஆ. ஸ்ரீகிருஷ்ணன் பரமபதத்தை அடையும் நேரத்தில் அவரின் கேசத்தில் ஒரு முடி கூட நரைக்கவில்லை, அதேபோல் அவரின் சருமத்தில் ஒரு சுருக்கம் கூட இல்லை.

இ. ஸ்ரீகிருஷ்ணனின் பிறப்பு நேரம் மற்றும் வயது சம்பந்தமாக புராணம் மற்றும் நவீன ஆராய்ச்சி ஆகியவற்றில் கருத்து வேறுபாடு உள்ளது. சிலர் அவரின் வயது 125 என்றும் சிலர் 110 என்றும் கூறுகின்றனர்.

11. ஸ்ரீகிருஷ்ணன் ஸ்ரீமத்பகவத்கீதை
ரூபத்தில் ஆன்மீகத்தின் விஞ்ஞான பூர்வ
விளக்கங்களை எல்லோர் முன்னாலும் வைத்துள்ளார்.
இது மனிதகுலத்திற்கு மிகப் பெரிய வழிகாட்டுதலாகும்.’

(தகவல் : வலைதளம்)

Leave a Comment